அனைத்து ஆசிரியர்களுக்கும் திறன் வலுவூட்டல் பயிற்சி வழங்குவதற்கான கால அட்டவணை பள்ளிக் கல்வித்துறை வெளியீடு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 6, 2022

அனைத்து ஆசிரியர்களுக்கும் திறன் வலுவூட்டல் பயிற்சி வழங்குவதற்கான கால அட்டவணை பள்ளிக் கல்வித்துறை வெளியீடு.

தமிழ்நாட்டிலுள்ள மாவட்டங்களை மண்டலங்களாகப் பிரித்து , மண்டலங்களில் உள்ள பள்ளிகளில் இயக்குநர்கள் , இணை இயக்குநர்கள் வகுப்பறை உற்றுநோக்கல் மற்றும் பள்ளிப் பார்வையினை மேற்கொண்டுவருகின்றனர். இந்நிலையில் மண்டல அளவில் தஞ்சாவூர் , திருநெல்வேலி , விழுப்புரம் ஆகிய மண்டலங்களில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டத்தில் வகுப்பறை உற்று நோக்கல் சார்ந்து பெற்ற விவரங்களை ஆய்வு செய்தபோது , மாணவர்களுக்கு கற்றல் அடைவுகளை அடையச் செய்வதற்கான ஆசிரியர்களின் முயற்சிகளை வலுப்படுத்த வேண்டிய அவசியம் கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டிலுள்ள தொடக்க , நிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளிலுள்ள ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கான பாடவாரியான , மாநிலப் பாடத்திட்டத்திற்கான கற்றல் அடைவுகள் ( Learning Outcomes ) மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் வரையறுக்கப்பட்டு அதனை மாணவர்களுக்கு அடையச் செய்வதற்கான கற்பித்தல் முறைகள் குறித்தும் ஏற்கெனவே பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் இது சார்ந்து ஆசிரியர்களுக்குள்ள சந்தேகங்களை நிவர்த்திக்கும் பொருட்டும் , ஒவ்வொரு பாடத்திற்குமான கற்றல் அடைவுகளை எங்ஙனம் மாணவர்களுக்கு அடையச்செய்வது என்பது குறித்து தெளிவான புரிதலை ஏற்படுத்திக் கொள்ள ஏதுவாக தொடக்க , நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரைக் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி கட்டாயமாகிறது.


ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் : 


தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி வழங்கப்படும்போது பள்ளியிலுள்ள மொத்த ஆசிரியர்களின் எண்ணிக்கையை இரண்டாகப் பிரித்துக் கொண்டு பயிற்சியில் பங்கேற்கச் செய்தல் வேண்டும். ஒரு குழு பயிற்சியில் ஈடுபடும்போது , மற்றொரு குழு பள்ளிச் செயல்பாடுகளை மேற்கொள்ளவேண்டும். நடுநிலை , உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரைக் கற்பிக்கும் ஆசிரியர்கள் அவரவர் கற்பிக்கும் பாடத்திற்கான கற்றல் அடைவுப் பயிற்சி நடைபெறும் நாளில் பங்கேற்கச் செய்தல் வேண்டும் . வட்டாரக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக்கல்வி அலுவலர்கள் பயிற்சி நடைபெறுவதை உற்று நோக்குவதுடன் தங்களது முதன்மைப்பாடம் சார்ந்த கற்றல் அடைவு வலுவூட்டல் பயிற்சி நடைபெறும் நாட்களில் அவர்கள் முழுமையாக அப்பயிற்சியில் பங்கேற்கவேண்டும்.


Training Schedule - Proceedings - Download here...


No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி