Breaking : TRB - POLYTECHNIC LECTURERS - RELEASE OF TENTATIVE KEY AND OBJECTION TRACKER - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 7, 2022

Breaking : TRB - POLYTECHNIC LECTURERS - RELEASE OF TENTATIVE KEY AND OBJECTION TRACKER

  

ஆசிரியர் தேர்வு வாரியத்தால் Computer Based Examination 08.12.2021 முதல் 13.12.2021 வரை காலை / மாலை இருவேளைகள் தேர்வு நடத்தப்பட்டது. தற்பொழுது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரிய தற்காலிக உத்தேச விடைக்குறிப்புகள் ( Tentative Key Answers ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.trb.tn.nic.in- ல் வெளியிடப்பட்டு உள்ளன . தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த Session ல் தேர்வு எழுதினார்களோ அந்த Session க்கு உரிய Master Question PaperTRB website- ல் வெளியிடப்பட்டுள்ளது. வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைகுறிப்பிற்கு objection தெரிவிக்கும் போது அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும் , சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.


இவையனைத்தும் முற்றிலுமாக நிராகரிக்கப்படும் . ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் 07.01 . 2022 பிற்பகல் முதல் 10.01.2022 பிற்பகல் 5.30 மணி வரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரியில் மட்டுமே ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும் . அங்கீகரிக்கப்பட்ட பாடப்புத்தகங்கள் / மேற்கோள் புத்தகங்கள் ( Standard Text Books / Reference Books ) ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும் . கையேடுகள் மற்றும் தொலைதுார கல்வி நிறுவனங்களின் வெளியீடுகள் , ஆதாரங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது . தபால் அல்லது பிறவழி முறையீடுகள் ஏற்கப்பட மாட்டாது , அவை நிராகரிக்கப்பட்டதாக கருதப்படும் . மேலும் , பாட வல்லுநர்களின் முடிவே இறுதியானது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Click here for Tentative Key and Objection Tracker

5 comments:

  1. ஏழாம் வகுப்பு
    சமூக அறிவியல்
    மூன்றாம் பருவம்
    ஆன்லைன் டெஸ்ட்
    https://tamilmoozi.blogspot.com/2022/01/7th-std-social-science-term-3-book-back.html

    ReplyDelete
  2. Working and already down load, pls put enrollment no, dob, and mention date of exam, next u will select shift, now showing... All the best

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி