பணி நியமன தேர்வுகள் அனைத்தும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு - TNPSC தலைவர் அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 5, 2022

பணி நியமன தேர்வுகள் அனைத்தும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைப்பு - TNPSC தலைவர் அறிவிப்பு.

டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் அனைத்தும் மறு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்படுகிறது - டிஎன்பிஎஸ்சி தலைவர் அறிவிப்பு 


TNPSC தேர்வுகள் தள்ளிப் போகிறது :


தமிழ்நாட்டில் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளதால், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்த உள்ள தேர்வுகள் தள்ளிப்போவதற்கு வாய்ப்புள்ளதாகவும், இது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளதாக அதன் தலைவர் பாலசந்திரன் தெரிவித்தார். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் ,ஜனவரி மாதம் 3 தேர்வுகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.


அதன்படி வரும் 8 ம் தேதி நகராட்சி நிர்வாகம் திட்டமிடுதல் துறையில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கும், சுகாதாரத்துறையில் காலியாக உள்ள ஒருங்கிணைந்த புள்ளியியல் பணியாளர்கள் பணியிடத்திற்கு 9 ந் தேதியும்,தமிழ்நாடு பொதுத்துறையில் ஆராய்ச்சி உதவியாளர்கள் பணிக்கு 22 ந் தேதியும் எழுத்துத் தேர்வு நடத்துவதற்கு திட்டமிடப்பட்டு இருந்தன. 


இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளதால், டிஎன்பிஎஸ்சியில் நடைபெற இருந்த தேர்வுகள் , மாற்று தேதிக்கு தள்ளிப் போக வாய்ப்பு உள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக தகவலை நாளை தெரிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.

5 comments:

  1. மெதுவா.... சொல்லுங்க தல.. TRB தலைவர்க்கு கேட்ர போகுது....

    ReplyDelete
  2. சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி