தமிழக அரசு துறைகளின் காலியிடங்களை நிரப்ப தமிழக அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி. நடத்திய நான்கு தேர்வுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
டி.என்.பி.எஸ்.சி. தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி கிரண் குராலா வெளியிட்ட செய்திக்குறிப்பு:
* தமிழக தடய அறிவியல் சார்நிலை பணிகளில் இளநிலை அறிவியல் அலுவலர் பணியில் 72 காலியிடங்களை நிரப்ப 2019 ஆகஸ்டில் தேர்வு நடந்தது; 8851 பேர் இதில் பங்கேற்றனர்.இந்த தேர்வு முடிவின்படி ஏற்கனவே 65 இடங்கள் நிரப்பப்பட்டன. மீதமுள்ள ஏழு இடங்களுக்கு வரும் 15ல் நேர்முக தேர்வு நடக்கிறது. இதில் 21 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்
* தமிழக பொதுப்பணியில் அடங்கிய இரண்டாம் நிலை அரசு உதவி வழக்கு நடத்துனர் பணியில் 50 காலியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு நவ.6ல் தேர்வு நடந்தது. இதில் 4047 பேர் பங்கேற்றனர்.இந்த பணிக்கான முதன்மை தேர்வு இந்தாண்டு மே 6 7ல் நடக்க உள்ளது. இதில் 570 பேர் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர்
* வேலைவாய்ப்பு பயிற்சி பணியில் முதல்வர் மற்றும் உதவி இயக்குனர் பதவியில் ஆறு காலியிடங்கள் மற்றும் ஒருங்கிணைந்த நிலவியல் சார்நிலை பணியில் 26 காலியிடங்களுக்கு நடந்த தேர்வுகளுக்கான முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன.இந்த விபரங்களை டி.என்.பி.எஸ்.சி.யின் www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி