TRB வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் சிறப்பாசிரியர் தேர்வு அறிவிப்பு இடம்பெறாதது பற்றி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விளக்கம். - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jan 26, 2022

TRB வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் சிறப்பாசிரியர் தேர்வு அறிவிப்பு இடம்பெறாதது பற்றி ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் விளக்கம்.

 

வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் தையல், ஓவியம் உள்ளிட்ட சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு இடம்பெறாதது ஏன் என்பது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜி.லதா விளக்கம் அளித்தார்.

2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியம் நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில், முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு, ஆசிரியர் தகுதித்தேர்வு, இடைநிலை மற்றும் பட்டதாரி தேர்வு, அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வு உட்பட 7 தேர்வுகளுக்கான அறிவிப்புகளும் அவற்றுக்கான அறிவிக்கை எப்போது வெளியாகும், தேர்வுகள் எப்போது நடத்தப்படும் என்பது குறித்த விவரங்கள் இடம்பெற்றிருந்தன.

ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு பிப்.26-ம் தேதி அறிவிப்பு வெளியிடப்பட்டு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தள்ளிவைக்கப்பட்ட தையல், ஓவியம், இசை, உடற்கல்வி ஆகிய சிறப்பாசிரியர் தேர்வுக்கான அறிவிப்பு இடம்பெறவில்லை. முன்பு வெளியிடப்பட்டிருந்த சிறப்பாசிரியர்  தேர்வு அறிவிப்பில் 1,598 காலியிடங்கள் நிரப்பப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆன்லைன் விண்ணப்பப் பதிவு தள்ளிவைக்கப்பட்டதால் கண்டிப்பாக தேர்வு நடத்தப்படும் என்ற நம்பிக்கையோடு தமிழகம் முழுவதும் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தேர்வர்கள் இத்தேர்வுக்கு தனியார் பயிற்சி மையங்களில் சேர்ந்தும், சுயமாகவும் தயாராகி வருகின்றனர்.

இந்நிலையில், சிறப்பாசிரியர்  தேர்வுக்கான அறிவிப்பு, 2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் இடம்பெறாதது அனைத்து தேர்வர்களையும் கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இதுதொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் ஜி.லதாவிடம் கேட்டபோது, "வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் சிறப்பாசிரியர்  தேர்வுக்கான அறிவிப்பு விடுபடவில்லை. சிறப்பாசிரியர் தேர்வு தொடர்பாக சில விளக்கங்களைப் பெற வேண்டியுள்ளது. அவை பெறப்பட்ட பின்னர் சிறப்பாசிரியர் தேர்வு அறிவிப்பு, வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் சேர்க்கப்பட்டு, தேர்வு நடத்தப்படும்" என்றார்.

2022-ம் ஆண்டுக்கான வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் ஆசிரியர் தகுதித்தேர்வு, அரசு பாலிடெக்னிக், ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர் தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியானது.



8 comments:

  1. முதல் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு ம் ஒரு வாய்ப்பு கொடுத்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete
  2. Pending posting podunga drawing

    ReplyDelete
  3. லதா அம்மா அவர்களே சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள் மற்றும் நீங்கள் இருக்கும் போது தயாரித்து வெளியிடபட்ட முதல் பட்டியல் ஓவியம் தமிழ் வழி சரிதான்,,,,,,சிலர் பொறுமையாக கொண்டு முதல் பட்டியலுக்கு வழக்கு தொடுத்தனர்,,,,, 2017எழுதிய சிறப்பாசிரியர்கள் ஓவியம் தேர்வுக்கு 2021 ல் வெளியிட்ட தமிழ் வழி அரசு ஆணை எப்படி அம்மா பொருத்தம் அடையும்,,,,,தயவுசெய்து மறு பரிசீலனை செய்து 60 மற்றும் 60 மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு ஒரு வாய்ப்பு தாருங்கள்,,,,,மன உளைச்சலில் உள்ளவர்களுக்கு உங்கள் மூலமாக அவர்கள் வாழ்க்கைக்கு ஒளி விளக்கு ஏற்ற செய்யுங்கள்

    ReplyDelete
  4. லதா அம்மா சிறப்பாசிரியர்கள் ஓவியம் தமிழ் வழியில் உள்ளவர்களையும் பணி நியமனம் செய்யுங்கள்,,,,,60 மதிப்பெண் பெற்றவர்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்

    ReplyDelete
  5. லதா அம்மா அவர்களுக்கு சிறப்பாசிரியர் தேர்வில் தேர்ச்சி பெற்ற உடற்கல்வி ஆசிரியர் 60 மதிப்பெண் மேல் எடுத்தவர்களுக்கு பணி ஆணை வழங்க தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன். நன்றி

    ReplyDelete
    Replies
    1. எல்லோரும் குரல் கொடுங்கள்

      Delete
  6. ஓஹோ....
    இப்ப அது மட்டும் தான் பாக்கியா?!
    அடேய்...
    அடங்கொன்னியா...

    ReplyDelete
  7. சிறப்பாசிரியர்கள் வாழ்க ஒழிக

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி