பள்ளிக் கல்வித் துறையில் 2020-21 ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கான முன்மொழிதல் தொடர்பாக உயர் கல்வித் துறையின் கடிதம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 24, 2022

பள்ளிக் கல்வித் துறையில் 2020-21 ஆம் ஆண்டின் சிறந்த அறிவியல் ஆசிரியர் விருதுக்கான முன்மொழிதல் தொடர்பாக உயர் கல்வித் துறையின் கடிதம்!


தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு உதவிப் பெறும் உள்ளாட்சி அமைப்புகள் நடத்தும் உயர்நிலைப் பள்ளிகள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களில் சிறந்த அறிவியல் ஆசிரியர்களை கண்டறியவும் , ஊக்கப்படுத்தவும் , அதன் ஊடாக மாணாக்கர்களை எதிர்காலத்தில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் அறிவியலாளர்களாக உயர்த்துவதற்கும் , அறிவியல் நகரம் 2018-19 - ஆம் ஆண்டு முதல் “ சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது ” -களை வழங்கி வருகிறது.

 இவ்விருதுக்கு தேர்ந்தெடுக்கப்படும் 10 ஆசிரியர்களுக்கு தலா ரூ .25,000 / க்கான காசோலை ( ரூபாய் இருபத்தைந்தாயிரம் மட்டும் ) மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். 
இவ்விருதிற்கு கீழ்க்கண்ட ஐந்து பாடப்பிரிவுகள் அறிவியல் நகரத்தால் பரிந்துரைக்கப்பட்டுள்ளது : 

1. கணிதம் 
2.இயற்பியல் 
3.வேதியியல் 
4. உயிரியல் மற்றும் 
5.புவியியல் / கணினி அறிவியல் / வேளாண் நடைமுறைகள்

1 comment:

  1. *ஆசிரியப்பணி எனும் அறப்பணி*

    Date 24.02.2022

    முதுகலை ஆசிரியர் கலந்தாய்வு ஒத்தி வைக்க காரணமாக இருந்த வழக்கு அனைத்தும்- *சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் அவர்களால் தள்ளுபடி செய்து உத்தரவு ஆணை தற்போது பிறப்பித்துள்ளார்*

    மேலும் ட்ரான்ஸ்பர் கவுன்சிலிங் , தள்ளிவைப்பது என்பது மிகவும் *Infectious* என்று வார்த்தையை மாண்புமிகு நீதியரசர் குறிப்பிட்டுள்ளார் .

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி