அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்பு கட்: ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Feb 28, 2022

அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்பு கட்: ஆசிரியர்கள் கூண்டோடு இடமாற்றம்

 

அரசு பள்ளிகளில் உள்ள எல்.கே.ஜி., வகுப்புகளை மூட, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அதனால், எல்.கே.ஜி., வகுப்பு நடத்திய அரசு பள்ளி ஆசிரியர்கள், ஒன்றாம் வகுப்புக்கு மேற்பட்ட பணிக்கு மாற்றப்பட்டு உள்ளனர். 


  தமிழக பள்ளி கல்வி துறையின் கீழ் செயல்படும், அரசு மேல்நிலை பள்ளிகளை, ஒருங்கிணைந்த கல்வி வளாகமாக மாற்ற, கடந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.முதற்கட்டமாக, மாவட்டம்தோறும் மாதிரி மேல்நிலை பள்ளிகள் துவக்கப்பட்டு, அங்கு, தொடக்க, நடுநிலை பள்ளிகள் இணைக்கப்பட்டன. மேலும், எல்.கே.ஜி., - யு.கே.ஜி., வகுப்புகளும் துவக்கப்பட்டன. பின், 2,381 அங்கன்வாடிகளை அருகில் உள்ள தொடக்க பள்ளிகளுடன் இணைத்து, எல்.கே.ஜி., வகுப்புகள் துவங்கி மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.


எல்.கே.ஜி., வகுப்புக்கு பாடம் எடுக்க, அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டது. இந்த மாற்றத்துக்கு பல ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பணி நிரவல் அடிப்படையில் மாறுதல் வழங்கப்பட்டது. இந்நிலையில், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு அதிகாரிகள் மாற்றப்பட்டனர். தற்போது, எல்.கே.ஜி., ஆசிரியர்களுக்கு, அவர்கள் ஏற்கனவே பணியாற்றிய இடங்களுக்கே, பணி மாறுதல் வழங்கப்படுகிறது.

  வரும் கல்வி ஆண்டிற்கான எல்.கே.ஜி., வகுப்புகளை மூட, பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளதால், ஆசிரியர்களுக்கு முன்கூட்டியே இடமாறுதல் வழங்கப்படுவதாக, பள்ளிக்கல்வி வட்டாரங்களில் கூறப்படுகிறது.இதை உறுதி செய்யும் வகையில், வரும் கல்வி ஆண்டுக்கான எல்.கே.ஜி., மாணவர் சேர்க்கையும் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.


நடப்பு கல்வி ஆண்டு முடிந்ததும், அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., வகுப்புகளை மூடிவிட்டு, சமூக நலத்துறையின் அங்கன்வாடிகளே மீண்டும் எல்.கே.ஜி., வகுப்பை நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.இதனால், கடந்த ஆண்டு அரசு பள்ளிகளில் எல்.கே.ஜி., சேர்ந்த மாணவர்கள், வரும் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் யு.கே.ஜி., படிக்க முடியாது.எனவே, இந்த மாணவர்களை, தனியார் பள்ளிகளில் யு.கே.ஜி., சேர்க்க பெற்றோர் முயற்சித்துவருகின்றனர்.

4 comments:

 1. இப்போ இருக்க பேய் க்கு முன்ன இருந்த பிசாசுகள் தேவலாம் போல. . ச்சே

  ReplyDelete
 2. ஏழை/எளிய மழலைக் குழந்தைகளது எதிர்கால கல்வி மேம்பாட்டிற்கு அடித்தளம் அமைத்திடுகின்ற மகத்தான மழலையர் வகுப்புகளை(எல்.கே.ஜி/யூ.கே.ஜி) தமிழக அரசு எக்காரணம் கொண்டும் மூடுவதறனைக் கைவிட வேண்டும். இத்தகு வகுப்புகளை, புகழ் மணம் பரப்பிடும் தமிழக பள்ளிக் கல்வித்துறைகள் மூலமாகவே நடத்திட அரசு போர்க்கால விரைவுமிகு நடவடிக்கைகள் கட்டாயம் எடுத்திட முன் வர வேண்டும். இஃது, மிக மிக இன்றியமையாதது ஆகும். புனிதமிகு மழலையர் வகுப்புகளை மூடுவது மனித நேயம்/மனித உரிமை/சமத்துவம்/மக்கள் ஆட்சித் தத்துவம் ஆகிய அனைத்திற்கும் முற்றிலும் எதிரானது.

  கவிஞர்

  ஜெ. இராமநாதன்
  நியூ ஹவுஸிங் போர்டு
  சிவகாசி.

  ReplyDelete
 3. மிக கண்டிக்க வேண்டிய செயல்....நல்லதிட்டமாக இருந்தது...மாணவர்கள் சேர்ந்தாச்சு...

  ReplyDelete
 4. LKG , UKG அரசு பள்ளிகளில் இருந்தால் மாணவர்கள் தொடர்ந்து 12ம. வகுப்பு வரை மாணவர்களுக்கான தேர்ச்சி அதிகரிக்கும்.
  ஏழை எளிய மாணவர்கள் பயனடைவார்கள்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி