Breaking : மனமொத்த மாறுதல் Mutual Transfer விண்ணப்பங்களை இன்றே 28.02.22 பெற்று பணியில் சேர நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 28, 2022

Breaking : மனமொத்த மாறுதல் Mutual Transfer விண்ணப்பங்களை இன்றே 28.02.22 பெற்று பணியில் சேர நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 

2021 2022 ஆம் கல்வியாண்டில் ஊராட்சி ஒன்றிய / நகராட்சி / அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு இணைய வழியில் EMIS மூலம் பொது மாறுதல் , பதவி உயர்வு மற்றும் பணி நிரவல் கலந்தாய்வு பணிகள் 21.01.2022 முதல் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


 மலை சுழற்சி முறை பின்பற்றப்படும் ஒன்றியங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டம் தவிர்த்து பிற மாவட்டங்களில் மேற்படி அரசாணையின் வ.எண் . ( 6 ) -ல் தெரிவிக்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களை பின்பற்றி , ஆசிரியர்களின் மனமொத்த மாறுதல் விண்ணப்பங்களை 28.02.2022 முற்பகல் பெற்று , பரிசீலனை செய்து அன்று பிற்பகல் ஒன்றியத்திற்குள் மற்றும் மாவட்டத்திற்குள் மனமொத்த மாறுதல் ஆணைகள் வழங்கிட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் , மனமொத்த மாறுதல் ஆணை பெற்ற ஆசிரியர்கள் அனைவரையும் 28.02.2022 பிற்பகல் விடுவித்து 01.03.2022 அன்று பணியில் சேரும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கலாகிறது .

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி