தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – அரசுக்கு கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 6, 2022

தமிழகத்தில் பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை – அரசுக்கு கோரிக்கை!

 

தமிழகத்தில் கடந்த 1ம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் சனிக்கிழமைகளில் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


பள்ளிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை:


தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்புகளுக்கு பிறகு கடந்த 2021 செப்டம்பர் 1ம் தேதி முதல் முதல் கட்டமாக மேல்நிலை வகுப்புகளுக்கு பிறகு 1 – 8ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டது. தொற்று பரவும் அச்சம் காரணமாக அரசின் கொரோனா நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வந்தது. 10,11,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல் திருப்புதல் தேர்வும் நடைபெற்றது. தேர்வுகள் டிசம்பர் 24ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் டிசம்பர் 25 – ஜனவரி 1 வரை 9 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.


விடுமுறை முடிந்து ஜனவரி 2ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட இருந்த நிலையில் கொரோனா மூன்றாம் அலை தாக்கத்தால் மீண்டும் விடுமுறை அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்கள் வீட்டிலிருந்தே தேர்வுக்கு தயாராக பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியது. மீண்டும் அரசின் கல்வி தொலைக்காட்சி வாயிலாக மாணவர்கள் கற்று வந்தனர். அரசு நோய் தடுப்பு பணிகளின் விளைவாக கொரோனா மூன்றாம் அலை ஓய ஆரம்பித்தது. இந்த நேரத்தில் அரசு இரவு நேர ஊரடங்கு மற்றும் வார இறுதி நாட்களில் விதிக்கப்பட்ட முழு ஊரடங்கையும் ரத்து செய்தது.


அதனை தொடர்ந்து பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இந்த நிலையில் சனிக்கிழமைகளில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என்று மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். தற்போது உள்ள தொற்று பரவல் அச்சத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்வது பதற்றமான சூழலை உருவாக்குகிறது. மாணவர்கள் பேருந்துகளில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்கின்றனர், இதனால் தொற்று எளிதாக பரவ வாய்ப்புள்ளது. தொடர்ந்து 6 நாட்களும் பள்ளிக்கு செல்வதால் மன அழுத்தத்திற்கு ஆளாகின்றனர் அதனால் சனிக்கிழமை விடுமுறை அளிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

11 comments:

 1. பக்கத்து இலைக்கு பாயாசம் கொடுப்பா
  😁😁😁😁😁😁😁😁😁😁😁😁

  ReplyDelete
 2. Govt teacher mind voice:ஆத்தி நம்மதா கேட்டோம்னு கண்டுபிடிச்சிருவாங்களோ

  ReplyDelete
 3. நீங்கலாம் திருந்தவே மாட்டாங்க டா.....

  ReplyDelete
 4. B.ed படிச்சிட்டு வேலை இல்லாம அடுத்தவன் குண்டிய கெளர்ர நேரத்துல ஒழுங்கா உக்காந்து படிச்சா உருப்படியா ஒரு வேலைக்கு போய் தொலையலாம் ... என்கிற அறிவு சில ஜென்மங்களுக்கு இருப்பதில்லை...

  ReplyDelete
 5. எந்த மாணவரின் பெற்றோர்களோ மாணவர்களோ விடுமுறை கேட்கவில்லை கேட்பது யார் என்று கல்வி செய்தியிடமே விடுகிறேன்.......

  ReplyDelete
 6. வீட்டில் ஒன்னு இரண்டு பெத்திட்டு அதுங்க கூட உங்களால் மாரடிக்க முடியல. வந்து பார் மேல்நிலை பள்ளிக்கு தெரியும் அந்த பசங்களின் கூத்தை. அதான் அவங்க வாரத்தில் 2 நாள் விடுமுறை கேட்கிறாங்க. உனக்கு ஏன் வயிற்று எரிச்சல். போய் தாலுக்கா அலுவலகம், பத்திர பதிவு அலுவலகம் ஏன் விடுமுறைனு கேட்க உனக்கு துப்பு இருக்கா..................

  ReplyDelete
  Replies
  1. Correct sir . Vidunga . .வயித்து எரிச்சல் . So dogs barking

   Delete
 7. மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் யாரும் ஒழுங்காக இல்லை. ஒரு ரவுடி பேசுவது போலத்தான் அவர்களின் பேச்சு உள்ளது. மிக சரளமாக கெட்ட வார்த்தைகள் புழங்குகின்றன. இதில் தனியார்ப் பள்ளி அரசுப்பள்ளி என்றெல்லாம் இல்லை. அனைத்து தரப்பு மாணவர்களும் அப்படித்தான் இருக்கிறார்கள். கூட்டமில்லாத சினிமா தியேட்டரில் உட்கார்ந்திருப்பது போலத்தான் வகுப்பிலும் தெனாவெட்டாக உட்கார்ந்திருக்கின்றனர். ஆசிரியர் பாடம் நடத்தும் போதே நமட்டுச் சிரிப்பு கேலி கிண்டல், கெட்ட வார்த்தை பிரயோகங்கள், கோ எட் என்றால் ஜாடை மாடையாக இரட்டை அர்த்தத்தில் பேசுவது, ஆபாச சைகைகள் புரிவது, ஆசிரியர் கரும்பலகையில் எழுதும் போது கீழ்தரமான சைகைகள் புரிவது , என மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் தரம் தாழ்ந்து கொண்டே வருகிறது. இதற்குக் காரணம், கல்வியை மூன்றாந்தரத்தில் கொண்டுவந்து நிறுத்திய கடந்த அரசின் ஆட்சியும் கல்வியை குழி தோண்டிப் புதைக்கும் வண்ணம் அவர்கள் போட்ட அரசாணைகளும் தான். மாணவர்கள் பள்ளிக்கு வரத் தேவையில்லை, தேர்வு எழுதத் தேவையில்லை, வருகைப்பதிவு தேவையில்லை, எதுவும் தேவையில்லை, ஆனாலும் அவர்கள் நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி, என தமிழ்நாட்டில் கல்வி மிகக் கேவலமான நிலைக்குப் போய்விட்டது. இதை எல்லாம் சீர்படுத்த வேண்டிய கடமை தங்களுக்கு உள்ளதை மனதில் வைத்துக் கொண்டு ஆள்பவர்கள் செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

  ReplyDelete
 8. இந்திரபோகன் எழுதியுள்ளது நூறு சதவீதம் உண்மை.ஆசிரியர்களிடம் பயம் இருந்தால் தான் மாணவர்களிடம் நல்ல கல்வியை எதிர்பார்க்கலாம்.அரசு தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்.

  ReplyDelete
 9. All students want Saturday leave

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி