Breaking : PGTRB Exam Date Announced for English, Mathematics, Computer Science - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 3, 2022

Breaking : PGTRB Exam Date Announced for English, Mathematics, Computer Science

ஆசிரியர் தேர்வு வாரியம் இன்று (03.02.22) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு :


 முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 - 2020-21 - காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 12.02.2022 முதல் 15.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் 14 பாடங்களுக்கு தேர்வுகள் நடத்தப்படும் என 28.01.2022 பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது . 19.02.2022 நீங்கலாக , 16.02.2022 முதல் 20.02.2022 வரை 4 நாட்களுக்குரிய ஆங்கிலம் , கணிதம் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கான கணினி வழித்தேர்வுக்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 03.02.2022 வெளியிடப்படுகின்றது . இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு 1 மற்றும் அனுமதிச் சீட்டு 2 ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி அறிவிக்கப்படும் . இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்கள் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது.



6 comments:

  1. Same date for csir net mathematical science.how to write both exams for maths students in the same date?

    ReplyDelete
  2. அதே நாளில் CSIR-NET-MATHEMATICAL SCIENCE தேர்வு நடைபெறுகிறது, இரண்டு தேர்வும் முக்கியம் எனவே TRB தேர்வை 21 ஆம் தேதியில் வைத்தால் நன்றாக இருக்கும்.

    ReplyDelete
  3. 3 English questions la easy question ethu?

    ReplyDelete
  4. Sir csir net exam erukku😁😁😁😁

    ReplyDelete
  5. உடல் நிலை சரியில்லை தேர்வு தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி