D.TEd - விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி 130 விரிவுரையாளர்களுக்கு நோட்டீஸ் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 19, 2022

D.TEd - விடைத்தாள் மதிப்பீட்டில் குளறுபடி 130 விரிவுரையாளர்களுக்கு நோட்டீஸ்

 

தொடக்க கல்வி டிப்ளமா தேர்வில் விடைத்தாள்களை சரியாக மதிப்பிடாத குற்றச்சாட்டில் 130 ஆசிரியர்களுக்கான பணப் பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் செயல்படும் மாநில கல்வியியல்ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனமான எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில் ஆசிரியர் பயிற்சி கல்லுாரிகள் வழியே தொடக்க கல்வி ஆசிரியருக்கான டிப்ளமா படிப்புநடத்தப்படுகிறது.இந்த மாணவர்களுக்கு 2018- - 19ல் நடத்தப்பட்ட 'அரியர்' தேர்வில்சிலருக்கு மட்டும் அதிகமான மதிப்பெண்வ ழங்கப்பட்டதாக புகார் எழுந்தது. 

புகாருக்குள்ளான விடைத் தாள்களுக்கு உரிய மாணவ மாணவியருக்கு தேர்வு முடிவும் நிறுத்தப்பட்டது.இது தொடர்பாக 185 விரிவுரையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க எஸ்.சி.இ.ஆர்.டி.,க்கு அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் பரிந்துரை செய்தது.இதன்படி 185 பேரிடமும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் தங்கள் மீதான நடவடிக்கைக்கு சில விரிவுரையாளர்கள் நீதிமன்றத்தில் தடைஉத்தரவு பெற்றனர்.

இந்நிலையில் 130 விரிவுரையாளர்களுக்கு மட்டும் பதவி உயர்வு ஊதிய உயர்வு மற்றும் பணப் பலன் சலுகைகளை நிறுத்துவதாக எஸ்.சி.இ.ஆர்.டி., சார்பில் சம்பந்தப்பட்டோருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

1 comment:

  1. முதுகலை ஆசிரியர் க்கான இட மாறுதல் கலந்தாய்வு ஏப்பொழுது தான் நடத்துவீர்கள் ? அவரவர் கஷ்டம் அவரவருக்கு . பயண சிரமம், நேரமின்மை, மன அழுத்தம், வேலை பளு போன்ற பல்வேறு காரணங்களால் நாங்கள் பாதிக்கப்பட்டு உள்ளோம், இனியும் எத்துணை காலம் தான் பொறுமை காப்பது? உடனடியாக இதற்கு ஒரு முடிவை பள்ளி கல்வி துறை எடுக்க வேண்டும் என்பதே எங்களின் கோரிக்கை.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி