PGTRB - முதுநிலை ஆசிரியர் தேர்வு தள்ளிவைக்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Feb 5, 2022

PGTRB - முதுநிலை ஆசிரியர் தேர்வு தள்ளிவைக்க கோரிக்கை!

 

முதுநிலை ஆசிரியர் பணிக்கான, இரண்டாம் கட்ட போட்டி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், தேர்தலுக்கு பின் தேர்வை நடத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது.

அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை- 1, கணினி பயிற்றுனர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக, தமிழ் உள்ளிட்ட 14 பாடங்களுக்கு, வரும், 12 முதல் 15ம் தேதி வரையில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த அட்டவணை கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மற்ற பாடங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு அட்டவணை வெளியானது. வரும், 16 முதல் 20ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 19ம் தேதி மட்டும் விடுமுறை.இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் பலருக்கு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. 17ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை அதற்கான பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே, தேர்தல் முடிந்த பின்னர், இந்த தேர்வை நடத்துமாறு, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

10 comments:

  1. தேர்வு தேதியை ஒத்திவைக்க வேண்டும்... 2019 தேர்வு இன்னும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளது

    ReplyDelete
  2. 13000*3 39000 பேருக்கு மட்டுமே தேர்தல் பணி. So need not to postpone the exam.

    ReplyDelete
  3. தேர்தலை ஒத்தி வைக்க வேண்டும்

    ReplyDelete
  4. PG TRB exam ullathaal Nagarpura Ullatchi Thearthal Oththi vaikka veandum

    ReplyDelete
  5. Apply செய்த Application காண்பித்து தேர்தல் பணியிலிருந்து விலக்கு கோலங்கள் . அதை விட்டுவிட்டு தேர்வை ஒத்திவைக்க சொல்வது சரியல்ல. உண்மையிலேயே இவர்களுக்கு தேர்தல் பணி உள்ளதா ?
    இல்லை படிப்பதற்கு நேரம் கேட்கும் குருப்பா??????

    ReplyDelete
  6. Unknown
    February 5, 2022 at 6:38 PM
    Apply செய்த Application காண்பித்து தேர்தல் பணியிலிருந்து விலக்கு கேளுங்கள் . அதை விட்டுவிட்டு தேர்வை ஒத்திவைக்க சொல்வது சரியல்ல. உண்மையிலேயே இவர்களுக்கு தேர்தல் பணி உள்ளதா ?
    இல்லை படிப்பதற்கு நேரம் கேட்கும் குருப்பா??????

    ReplyDelete
  7. Same date for csir net exam and pgtrb maths.how is it possible?

    ReplyDelete
  8. என்ன இந்த அதிகாரிகள் பண்றது

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி