10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை: இன்று காலை 10 மணிக்கு அறிவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 2, 2022

10, 11, 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை: இன்று காலை 10 மணிக்கு அறிவிப்பு.

 

தமிழகத்தில் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு தேதி அட்டவணை இன்று காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது.


சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணிக்கு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வெளியிடுகிறார்.


கரோனா பரவல் குறைந்து வருவதால் தமிழகத்தில் திட்டமிட்டபடி பொதுத்தேர்வுகள் பள்ளிகளிலேயே நடைபெறும் என்று தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது.


படிக்க | காமாட்சி அம்மனை வரவேற்ற இஸ்லாமியா்கள்!


அதன்படி 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வுக்கான அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை இன்று வெளியிடுகிறது. 


கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா பெருந்தொற்று காரணமாக பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டன. பருவத் தேர்வுகளும் ஆன்லைன் முறையிலேயே நடத்தப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments:

  1. Counselling yeppo

    ReplyDelete
  2. Eppo vaikkiromnu sonnoma? Election varumpothu niyamaga nadathuvom

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி