அரசு துறை பதவிகளுக்கான போட்டி தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கும் போதே சான்றிதழ்களை ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும்' என, டி.என்.பி.எஸ்.சி.,அறிவித்துள்ளது.
இது குறித்து அரசுபணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டசெய்திக் குறிப்பு:டி.என்.பி.எஸ்.சி., பணி நியமன நடவடிக்கையில் குரூப் -- 1, 2 மற்றும் 4 ஆகிய பிரிவுகளின் பதவிகளை தவிர மற்ற அனைத்து வகை பதவிகளுக்கும் 'ஆன்லைன்' விண்ணப்பப் பதிவில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளது.விண்ணப்பத்தில் உள்ள தகவல்களுக்கு ஆதாரமான அனைத்து சான்றிதழ்களையும் பதிவேற்ற வேண்டும்.
எனவே தேர்வர்கள் தங்களின் அனைத்து வகை சான்றிதழ்களையும் முன்னரே 'ஸ்கேன்' செய்து, தயார் நிலையில் வைக்க வேண்டும். ஏதாவது சான்றிதழ் தவறாக பதிவேற்றி இருந்தால் விடுபட்டிருந்தால்தேர்வு தேதிக்கு 12 நாட்களுக்கு முன் மீண்டும் சான்றிதழ்களை பதிவேற்ற அனுமதி அளிக்கப்படும்.
ஏற்கனவே பதிவேற்றிய சான்றிதழ் மற்றும் ஆவணங்களின் அடிப்படையில் மட்டுமே தேர்வுக்குப் பின் நடத்தப்படும் சான்றிதழ் சரிபார்ப்பு மேற்கொள்ளப்படும்.கூடுதல் விளக்கம் தேவைப்பட்டால் helpdesk@tnpscexams.in மற்றும் grievance.tnpsc@tn.gov.in என்ற இ- - மெயில் முகவரிக்கு மனுஅனுப்பலாம்.
அனைத்து வேலை நாட்களிலும் 1800 419 0958 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் காலை 10:00 மணி முதல், மாலை 5:45 மணி வரை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில்கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி