மே 2022 , பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வெழுத விரும்பும் நேரடித் தனித்தேர்வர்களுள் , இவ்வியக்ககத்தால் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சோத் தவறிய தனித்தேர்வர்கள் . 09.03.2022 ( புதன் கிழமை ) முதல் 15.03.2022 ( செவ்வாய் கிழமை ) வரை சம்பந்தப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்களை அணுகி , பதிவுக்கட்டணமாக ரூ .125 / - ஐச் செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும் எனவும் மாவட்டக் கல்வி அலுவலர்களால் ஒதுக்கீடு செய்யப்படும் பள்ளிகளுக்குச் சென்று அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள வேண்டுமெனவும் அறிவிக்கப்படுகிறது . மேலும் , அறிவியல் பாட செய்முறை பயிற்சி வகுப்பிற்கு பதிவு செய்த உடன் , மாவட்டக் கல்வி அலுவலரால் வழங்கப்படும் பயிற்சி வகுப்பில் சேர்ந்ததற்கான விண்ணப்ப அத்தாட்சி சீட்டைப் பெற்று அவரவர் கல்வி மாவட்டத்தில் அமைந்துள்ள அரசுத் தேர்வு சேவை மையத்தில் சமர்ப்பித்து விட்டு , மே 2022 எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்விற்கு 09.03.2022 முதல் 16.03.2022 வரை அறிவியல் பாடம் கருத்தியல் உட்பட விண்ணப்பிக்கத் தகுதியான பாடங்களுக்கும் ( அனைத்து / தவறிய பாடங்கள் ) அச்சேவை மையங்களின் மூலம் தனியாக ஆன் - லைனில் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்படுகிறது.
குறிப்பு :
1. எட்டாம் வகுப்பு தேர்வில் ஆங்கிலத்துடன் தேர்ச்சி பெற்றவர்கள் மற்றும் ஒன்பதாம் வகுப்பு பயின்று தேர்ச்சி அல்லது இடையில் நின்ற மாணாக்கர்கள் , தேர்வுத்துறையால் நடத்தப்படும் எட்டாம் வகுப்பு ( ESLC ) பொதுத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களும் முதல் முறையாக பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வெழுதும் நேரடித் தனித் தேர்வர்கள் புதிய பாடத்திட்டத்தில் அறிவியல் பாடம் கருத்தியல் / செய்முறைத் தேர்வு எழுத வேண்டும் . ..
2. 2012 - ஆம் ஆண்டிற்கு முன்பு அறிவியல் பாடத்தில் தோல்வியுற்ற மாணாக்கர்கள் அறிவியல் பாடத்தில் கருத்தியல் மற்றும் செய்முறைத் தேர்வெழுத வேண்டும் . அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்பில் சேர்வதற்கான விண்ணப்பத்தினை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் 09.03.2022 முதல் 15.03.2022 வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் . பயிற்சி வகுப்புகள் நடைபெறும் நாள் மற்றும் மையம் போன்ற முழுவிவரங்களை அறிய அந்தந்த மாவட்டக் கல்வி அலுவலரை அணுகுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
No comments:
Post a Comment
கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.
குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி