Breaking:டியூசன் நடத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை -நீதிமன்றம் அதிரடி உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 1, 2022

Breaking:டியூசன் நடத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை -நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

டியூசன் நடத்தும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

வீடுகள் அல்லது சென்டர்களில் டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீதான புகார்களை தெரிவிக்க தனி வாட்அப் எண் உருவாக்கி விளம்பரப்படுத்தவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும்,டியூசன் எடுக்கும் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க மாவட்டந்தோறும் குழுவை ஏற்படுத்தவும் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே,பிற அரசு அலுவலர்களுடன் ஒப்பிடும்போது அரசுப்பள்ளி ஆசிரியர்களின் வேலை நாள் மற்றும் நேரம் குறைவானது.இவ்வாறு இருக்க டியூசன் எடுப்பது ஆசிரியர் சமூகத்தில் புற்றுநோய் போல் பரவி வருகிறது என்றும் இது பணம் சம்பாதிக்கும் பேராசையை அதிகரிக்கிறது என்றும் உயர்நீதிமன்றக் கிளை கருத்து தெரிவித்துள்ளது.

தனது பணியிட மாறுதலை எதிர்த்து ,தஞ்சையை சேர்ந்த ராதா என்பவர் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இத்தகைய உத்தரவையும் கருத்தையும் தெரிவித்துள்ளது.

10 comments:

 1. Makala service pandra M.L.A, M.P , doctor, Minister, ivangu ellam part time job parkalam ...cinema act pannalm, clinic shop vaikalam why teacher tution vaika kuadadhu..poor people ku fees vanga ma solli kodukalam...mudhiyor kalvi motive pannalam....ippudi soli tharum techer niriya Peru irrukanga

  ReplyDelete
 2. நீதி பதி அவர்களுக்கு வணக்கம் ஒன்றும் சிக்கல் இல்லை விரும்பும் ஆசிரியர்கள் வேறு துறைக்கு மாறிக் கொள்ளலாம் என ஒரு வார்த்தை சொல்லி பாருங்கள் .....உங்கள் விருப்பப்படி அதிக நேரம் வேலை உள்ள துறையாகவே இருக்கட்டும் ....ஆசிரியர்களுக்கு ok உங்களால் முடியுமா? ஏன் என்றால் ஆசிரியர்களும் கொஞ்சம் சம்பாதித்துக் கொள்ளட்டும். ...ஐயா வேண்டி கேட்டுக் கொள்கிறேன் கோடி கணக்கிலும் லட்சக் கணக்கிலும் லஞ்சமும் உழலும் உங்களுக்கு நன்றாக தெரியும் ஆனால் அதை எல்லாம் விட்டு விட்டு சில நூறுக் காக வும் ஆயிரத்துக்காகவும் பாடம் சொல்லி கொடுத்து வாழும் ஆசிரியர்களை கூறுவது எப்படி என்று தெரியவில்லை.....

  ReplyDelete
  Replies
  1. வேறு துறையில் மாற்றி கொடுத்தால் பாதிக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மாறுவதற்கு ரெடி நீங்கள் ரெடியா

   Delete
 3. இவனுங்களுக்கு ஆசிரியர் என்றால் இளிச்சவாயனுங்களா தெறிவாங்க போல எதற்கெடுத்தாலும் சம்பளம் கூட டியூசன் எடுக்க கூடாது என்று சொல்வானுங்க அவனுக்கு மட்டும் அரசு வேலை பார்த்து கொண்டு லஞ்சம் வாங்கி சொத்து குவிப்பானுக நிறைய பிஸ்னஸ் செய்வானுங்க அதை யாரும் சொல்ல மாட்டார்கள்

  ReplyDelete
 4. Tet candidates chennai la porattam panranga kalviseithi oru newsum poda villai???????

  ReplyDelete
 5. Porattam endha nilaiyil irukkiradhu

  ReplyDelete
 6. தனியார்ப் பள்ளியிலும் சரி, அரசுப்பள்ளியிலும் சரி, மாணவர்கள் வகுப்பில் பாடம் எடுக்கும் போது, அடிக்கும் லூட்டிகள் சொல்லி மாளாது. ஆசிரியர்களை ஏதோ கோமாளிகள் போல நினைத்துக்கொண்டும், கமெண்ட் அடித்துக் கொண்டும், வகுப்பறையா சந்தைக் கடையா என்று சந்தேகப்படும் வண்ணம் ஒரு தெருக்காட்டுக் கூச்சல்தான் தமிழகமெங்கும் உள்ள பள்ளிகளில் கேட்டுக் கொண்டிருக்கிறது. ஆசிரியர் வகுப்பில் அதட்டினால் அதை மறைவாக செல்போனில் படம் பிடித்து வெட்டி ஒட்டி எடிட் செய்து உள்நோக்கத்துடன் வீடியோவைச் சித்தரித்து, பத்திரிக்கையாளரிடம் கொடுத்து செய்தியாய்ப் போட ஒரு பெரும் மாணவ கூட்டமே இருக்கிறது. இப்படிப்பட்ட வக்கிரம் பிடித்த மாணவ மாணவியர்கள் தான் தமிழகமெங்குமுள்ள மேல்நிலைப்பள்ளிகளில் கணிசமாக இருக்கின்றனர். எந்த மாணவனுக்கும் படிப்பில் அணு அளவு கூட நாட்டமில்லை. பல மாணவர்கள் கஞ்சா அடித்துவிட்டு வகுப்பிற்கு வருகின்றனர். தனியார்ப் பள்ளியும் இதற்கு விதிவிலக்கல்ல. இன்னும் சொல்லப்ே ரனா ல் தனியார்ப் பள்ள நிர்வாகம் மாணவர்களை அவர்கள் பீஸ் கட்டுகிறார்கள் என்பதற்காக அவர்களுக்கு அளிக்கும் சலுகைகள் ஏராளம். ஒரு தனியார்ப் பள்ளி மாணவர் தனக்கு பாடம் நடத்தும் ஆசிரியரை கெட்ட வார்த்தையில் வகுப்பில் திட்டலாம். அதற்கு அவருக்கு பூரண சுதந்திரம் உள்ளது. இதற்கு காரணம் தும்மினால் தேர்வு வேண்டாம், இருமினால் பள்ளிக்கு வரவேண்டாம், இலேசாக தொண்டையை செருமினால் பள்ளிகளைத் திறக்க வேண்டாம், என்று கூறுகெட்டத்தனமாகச் செயல்படும் ஊடகங்களும், ஊடகங்கள் சொல்வதைக் கேட்டுச் செயல்படும் சொந்த புத்தியில்லாத ஆட்சியாளர்களும் தான்.

  இப்படிப்பட்ட மாணவர்களுக்கு பாடம் நடத்த எந்த ஆசிரியர்தான் முன் வருவார். பல அரசு ஆசிரியர்கள் தனியார்ப் பள்ளி மாணவர்களுக்கு மாலை வேளை பயிற்றுநர்களாகச் செல்வதற்கு இது தான் காரணம். உலக மகா உத்தமர்களான நீதிபதிகள் செய்ய வேண்டியது, தவறான பாதையில் தறுதலைகளாகச் சென்று கொண்டிருக்கும் மாணவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர் கையில் மீண்டும் பழையபடியே பிரம்பினைக் கொடுப்பதுதான் கூடவே பீஸ் கட்டுகிறார்கள் என்பதற்காக மாணவர்களை இளம் கிரிமினல்களாக மாற்றி வைத்திருக்கும் தனியார்ப் பள்ளி நிர்வாகிகளுக்கு செருப்படியையும் தான்.

  ReplyDelete
 7. Apdiye govt doctors clinic.....govt advocate office....evangalukkum sollungalen

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி