IPL கிரிக்கெட் வீரர்களை போல, ஆசிரியர் இடமாறுதலுக்கும் ஏலமா? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 4, 2022

IPL கிரிக்கெட் வீரர்களை போல, ஆசிரியர் இடமாறுதலுக்கும் ஏலமா?

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களை போல, ஆசிரியர் இடமாறுதலுக்கும் ஏலமா? என்று மதுரை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியது.

ஆசிரியர் இடமாறுதலுக்கு லஞ்சம்

மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டு இருந்த ஆசிரியர் பணியிட மாறுதல் குறித்த வழக்குகள், நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தன.

அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வக்கீல்கள், “லஞ்சம் கொடுத்தால்தான் ஆசிரியர்களுக்கு இடமாற்றம் கிடைக்கிறது. அதிலும், ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு இடமாறுதல் பெற ரூ.10 லட்சம் வரை லஞ்சமாக கொடுக்க வேண்டி உள்ளது. இடமாறுதல் கவுன்சிலிங்கில் வெளிப்படை தன்மையே இல்லை” என வாதாடினார்கள். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவு வருமாறு:-

பல்வேறு வழக்குகளின் விசாரணையின்போது, ஆசிரியர் பணியிட மாற்றம் நேர்மையான முறையில் நடைபெறவில்லை என தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வைக்கப்படுகின்றன.

ஏலம் விடப்படுகிறதா?

ஐ.பி.எல். கிரிக்கெட் வீரர்களைப் போல, ஆசிரியர் பணியிடமாறுதலும் லட்சக்கணக்கில் ஏலம் விடப்படுகிறதா? என்ற கேள்வி எழுகிறது.

நீதித்துறை மற்றும் கல்வித்துறையின் நலன் கருதி, இந்த விவகாரத்தில் அரசின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும்.

ரூ.10 லட்சம் லஞ்சம் கொடுத்து பணியிட மாறுதல் பெற்றவர்கள் மாணவர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் எப்படி கற்பிப்பார்கள்? லஞ்சம் கொடுத்து ஆசிரியர்கள் பணியிட மாறுதல் பெறும் நிலை, சந்தேகத்திற்கு இடமின்றி கவலைக்குரியது.

பேரழிவை ஏற்படுத்தும்

இந்த நிலை தொடர்ந்தால், அது பேரழிவு, அபாய விளைவுகளுக்கு வழிவகுக்கும். ஆசிரியர் இடமாறுதலுக்கு லஞ்சம் என்பது தென் மாவட்டங்களில் மிகவும் சாதாரணமாக நடப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே இந்த வழக்கில் இந்த கோர்ட்டு தாமாக முன் வந்து, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீஸ் இயக்குனரை எதிர் மனுதாரராக சேர்க்கிறது.. இந்த வழக்கு குறித்து பள்ளிகல்வித்துறை செயலாளர், லஞ்ச ஒழிப்பு பிரிவு இயக்குனர் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டு, அடுத்தகட்ட விசாரணையை இன்றைக்கு (4-ந்தேதி) ஒத்திவைத்தார்.

11 comments:

  1. எப்படி சுவாமிநாதன் அவர்களே உங்க நீதித்துறையில் ஆளும் கட்சிக்கு சாதகமாக தீர்ப்பு சொன்னதால் மக்களவை M.p பதவிகொடுத்தார்களே அந்த மாதிரியா..தற்போதெல்லாம் நீதித்துறை உச்சநீதிமன்றம் முதல் உயர்நீதிமன்றம் வரை ஆளைக்காமி நீதிசொல்கிறேன் என்றுதானே இருக்கிறது...மதுரைக்கிளை நீதிபதி சுவாமிநாதன் அவர்களே அரசியல் விருப்பு வெறுப்புகளை போகிற போக்கில் ஏதோ கருத்து சொல்கிறமாதிரி சொல்லக்கூடாது ஆதாரத்தோடு நிரூபிக்கப்பட்டிருந்தால் தண்டனை யளிக்காமல் ஆளும்கட்சிமேல் உள்ள வெறுப்பினால் குரைக்கக்கூடாது....சினிமாம் படத்தை வைத்து நீதிசொல்லும் நீங்ளெல்லாம் பேசலாமா.....நீதிபதின்னா என்ன வானத்தில் இருந்து குதித்தவரா என்ன.....
    மதுரைக்கிளை நீதிமன்றம் எத்தனையோ நேர்மையான தன்னலமற்ற நீதியரசர்கள் அமர்ந்து நீதியை நிலைநாட்டிய இடம்..சுவாமிநாதன் பதவியேற்றதுமுதல் சாக்கடைபோல் நாற்றமடிக்கிறது

    ReplyDelete
  2. எப்போதுமே மக்களின் பாதுகாவலநாக செயல்பட்ட மதுரை உயர் நீதி மன்ற கிளை இப்போது தரம் தாழ்ந்து விட்டது

    ReplyDelete
  3. தென் மாவட்டத்தை சேர்ந்த ஒருவர் தொடக்கக் கல்வித் துறையில்,
    வட மாவட்டத்தில் நேரடி நியமனம் பெற்று பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடக்கக் கல்வித் துறை நடத்தும் பொது மாறுதலில் தென் மாவட்டம் செல்வதற்கான எந்த ஒரு வழிவகை செய்யாத காரணத்தினால் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

    தென் மாவட்டத்தில் உள்ள அனைத்து பட்டதாரி ஆசிரியர்களின் காலி பணியிடத்தை அதே மாவட்டத்திலுள்ள/ ஒன்றியத்திலுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு மூலம் வழங்கப்பட்டு வந்துகொண்டிருக்கிறது இதனால் பிற மாவட்டத்தில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்கள் அனைவருக்கும் தன் சொந்த மாவட்டத்தில் பணியாற்ற வாய்ப்பு மறுக்கப்பட்டு வருகிறது.

    இதனால் ஆள் பலம் மற்றும் பண பலம் உள்ளவர்கள் மட்டும் தன் சொந்த மாவட்டத்தில் நிர்வாக மாறுதல் மூலம் பணிமாறுதல் பெற்று பணியாற்றி வருகின்றனர்

    இதற்கு தொடக்க கல்வித்துறை வழிவகை செய்யுமா?

    ReplyDelete
    Replies
    1. இந்த பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி state level seniority கொண்டு வருவது தான் நண்பரே..சங்கங்களின் பதில் என்ன இதற்கு?

      Delete
    2. Sangangal dmk ku vote poda solla mattum than maths pirachani ellam kandukkathu

      Delete
    3. அருமை நண்பரே. மக்களுக்கான ஒரு நல்ல தீர்ப்பு என்றால் அரசை கேள்வி கேட்காமல் மழுப்பலாக அது அரசின் கொள்கை முடிவு என்பார்கள்.

      Delete
  4. அடப்பாவிகளா...இதையே இப்போ தான் கண்டுபிடிச்சிஙக்ளா

    ReplyDelete
    Replies
    1. கவுண்டமணி தேங்காய் விலை கேட்ட காமடி

      Delete
    2. Response Sheets மாயம்...
      தேர்வர்கள் அதிர்ச்சி....

      Delete
  5. முப்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு அலுவலகங்கள் ஆசிரியர்கள் அனைவரையும் ஆட்சி மாற்றம் வரும் போது அதே முப்பது கிலோ மீட்டர் தொலைவில் பணியிட மாறுதல் மாநிலம் முழுவதும் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    ReplyDelete
  6. ஆசிரியர் கலந்தாய்வில், கணவர் வேலை செய்யும் மாவட்டத்தில், மனைவிக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டுமே ஒழிய, இருவருக்கும் கொடுத்தால், சீனியாரிட்டி ஆசிரியர்களுக்கு, அவர்கள் விரும்பும் இடம் ஒருபோதும் கிடைக்காது.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி