SI POST Notification ( 03.03.2022 ) - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Mar 3, 2022

SI POST Notification ( 03.03.2022 )

 செய்தி குறிப்பு 


03.03.2022 தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் , காவல்துறையில் காலியாகவுள்ள 444 காவல் சார்பு ஆய்வாளர் ( தாலுகா மற்றும் ஆயுதப்படை ) ( ஆண் , பெண் மற்றும் திருநங்கை ) பதவிகளுக்கான நேரடித் தேர்வுக்கான அறிவிக்கை எண் : 01 / 2022 - ஐ 08.03.2022 அன்று வெளியிடப்படவுள்ளது. 


விண்ணப்பதாரர்கள் இந்த தேர்விற்கு www.tnusrb.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இணையவழி விண்ணப்பம் விண்ணப்பிக்க துவங்கும் நாள் : 08.03.2022.


இணையவழி விண்ணப்பம் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 07.04.2022. இவ்வாரியம் முதன்முறையாக தமிழ் மொழித் தகுதித் தேர்வை அரசால் வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களின்படி நடத்தவிருக்கிறது.


 இவ்வாரியத்தில் 08.03.2022 முதல் 07.04.2022 வரை கட்டுப்பாட்டு அறையில் " உதவி மையம் " வாரத்தின் ஏழு நாட்களும் செயல்படும். இதேபோன்று உதவி மையங்கள் தமிழ்நாடு முழுவதிலும் உள்ள மாநகர காவல் ஆணையாளர் அலுவலகங்களிலும் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகங்களிலும் , அலுவலக பணி நேரத்தில் செயல்படும். இணையவழி விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் / தெளிவுகளுக்கு இந்த " உதவி மையத்தின் " சேவைகளைப் பயன்படுத்திக்கொள்ள விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


மேற்படி தேர்வுக்கான தகுதி அளவுகோல் , தேர்வு செயல்முறை , எழுத்துத் தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மாதிரி கேள்விகள் போன்ற கூடுதல் விவரங்கள் இவ்வாரிய இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.


 ( தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரிய கட்டுப்பாட்டு அறை எண்கள் : 044-40016200 , 044-28413658 , 9499008445 , 9176243899 மற்றும் 978903725 ) , 

தலைவர் , தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் , 

சென்னை -8 .

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி