TNPSC 2022 - ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் இலவச ஆன்லைன் தேர்வு!(1000 வினாக்கள் கொண்ட ஆன்லைன் தேர்வு) - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 31, 2022

TNPSC 2022 - ஆயக்குடி மரத்தடி இலவச பயிற்சி மையத்தின் இலவச ஆன்லைன் தேர்வு!(1000 வினாக்கள் கொண்ட ஆன்லைன் தேர்வு)


1) "துணையாய் வருவது தூயநற் கல்வி" என்னும் வரி இடம்பெற்றுள்ள நூல் எது?

அ) நாலடியார்
ஆ) கொன்றைவேந்தன்
இ) திருமந்திரம்
ஈ) திருக்குறள்

2) தவறாக பொருந்தியுள்ளது எது?

அ) குறவர்- சமய நூலும் தத்துவ நூலும் கற்பிப்போர்.
ஆ) பள்ளிகள்- கலைகள் கல்வி கற்பிக்கும் இடங்கள்.
இ) சான்றோர் அவை- செயல்களைச் சீர்தூக்கிப் பார்க்கும் அவை.
ஈ) ஆசிரியர்- நிகண்டும் கணக்கும் கற்பிப்போர்.

3) சென்னை பல்கலைக்கழகம் தொடங்கப்பட்ட ஆண்டு என்ன?

அ) 1852
ஆ) 1854 
இ) 1857 
ஈ) 1911

4) வறண்ட வாழ்வு தளிர்க்க மழைபோல் வந்தாய் நீ! – இக்கவிதையில் இடம்பெறும் உவமை ………………….

அ) வடிவ உவமை
ஆ) பயன் உவமை
இ) வினை உவமை
ஈ) உரு உவமை

 5) மெக்காலே கல்வி குழு உருவாக்கப்பட்ட ஆண்டு என்ன?

அ) 1832 
ஆ) 1835 
இ) 1840 
ஈ) 1842

6) வறண்ட வாழ்வு தளிர்க்க மழைபோல் வந்தாய் நீ! – இக்கவிதையில் இடம்பெறும் உவமை ………………….
அ) வடிவ உவமை
ஆ) பயன் உவமை
இ) வினை உவமை
ஈ) உரு உவமை

7) "கொடி விளக்கு" என்னும் நூலின் ஆசிரியர் யார்?

அ) அண்ணா 
ஆ) இரா. மீனாட்சி
இ) பாரதியார்
ஈ) கண்ணதாசன் 

8) "மதுகை" என்னும் சொல்லின் பொருள் யாது?

அ) தேன்
ஆ) வீடு 
இ) பெருஞ்செல்வம்
ஈ) பெருமிதம்

9) எட்டுத்தொகை நூல்களுள் முதலாவதாக வைக்கப்படுவது எது?

அ) குறுந்தொகை
ஆ) நற்றிணை
இ) பரிபாடல் 
ஈ) ஐங்குறுநூறு

10) பொருத்துக.

1) ஒழுகுநீர்- (1) பண்புத்தொகை
2) தீம்பால்- (2) வினைத்தொகை
3) கொண்ட- (3) பெயரெச்சம்
4) அறிவும் ஒழுக்கமும்- 4) எண்ணும்மை

அ) 1-2, 2-2, 3-4, 4-3
ஆ) 1-2, 2-4, 3-1, 4-3
இ) 1-2, 2-1, 3-3, 4-4
ஈ) 1-2, 2-3, 3-4, 4-1

11) தொல்காப்பியத்தின் முதல் பதிப்பு வெளியான ஆண்டு என்ன?

அ) 1847 
ஆ) 1947 
இ) 1858 
ஈ) 1867 

12) தொழிற்பெயர் அல்லாதது எது?

அ) அறிதல்
ஆ)  பயிறல் 
இ) நனி இனிக்கும்
ஈ) போற்றல்

13) தொல்காப்பியம் எத்தனை அதிகாரங்களைக் கொண்டது?

அ) 2
ஆ) 3
இ) 4
ஈ) 5

14) எந்த பெயரில் பாரதி கருத்துப் படங்களை மட்டுமே கொண்ட இதழை நடத்த விரும்பினார்?

அ) சித்திராபதி
ஆ) சித்ராவளி
இ) சித்திரகுப்தன்
ஈ)  இந்தியா 

15) "பெண்மை அறிவுயரப் பீடோங்கும் பெண்மைதான்
 ஒண்மை யுறஓங்கும் உலகு" என்னும் குறள் வெண்பாவை பாரதியாரை எவ்விதழில் எழுதினார்?

அ) இந்தியா
ஆ) விஜயா
இ)  நவசக்தி
ஈ) சக்கரவர்த்தினி

16) "வினை பயன் மெய் உரு என்ற நான்கே வகை பெற வந்த உவமத் தோற்றம்" என்னும் வரி இடம் பெற்ற 
நூல் எது?

அ) நன்னூல்
ஆ) தொல்காப்பியம்
இ) புறநானூறு
ஈ) அகத்தியர் 

17) "நசைபெரிது உடையர் நல்கலும் நல்குவர்" என்னும் இடம் பெற்ற நூல் எது?

அ) குறுந்தொகை
ஆ) புறநானூறு 
இ) நற்றிணை 
ஈ) அகநானூறு

18)  9 அடி சிற்றெல்லையையும் 12 அடி பேரெல்லையும் கொண்ட நூல்  எது?

அ) நற்றிணை
ஆ) குறுந்தொகை
இ) அகநானூறு
ஈ) ஐங்குறுநூறு

19) தொல்காப்பியத்தில் உள்ள மொத்த இயல்களின் எண்ணிக்கை என்ன?

அ) 9
ஆ) 3 
இ) 27
ஈ) 13

20) ஜி.யு. போப் வாழ்ந்த காலம் என்ன?

அ) 1820 - 1908 
ஆ) 1821 -1907
இ) 1825 - 1901
ஈ) 1830 - 1908 

ஆன்லைன் தேர்வெழுத

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி