TNPSC - குரூப் - 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Mar 23, 2022

TNPSC - குரூப் - 2 தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி

 

குரூப் - 2, 2 ஏ' பணிகளில் அடங்கிய, 5,529 பணிகளுக்கான போட்டி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் இன்று முடிகிறது. விண்ணப்ப பதிவுக்கு கூடுதல் அவகாசம் வழங்க கோரிக்கை எழுந்துள்ளது.


தமிழக அரசின் பல்வேறு துறைகளில், குரூப் - 2 பதவிகளில் 116; குரூப் - 2 ஏ பதவிகளில் 5,413 காலியிடங்களை் நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், மே 21ல் முதல்நிலை தேர்வு நடக்க உள்ளது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு, பிப்., 23ல் துவங்கியது. 


பட்டப்படிப்பு முடித்த அனைவரும், குரூப் - 2, 2 ஏ பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாள்.இந்நிலையில், புதிதாக விண்ணப்பிக்கவும், விண்ணப்ப விபரங்களை திருத்தவும், கூடுதலாக ஒரு வாரம் அவகாசம் வழங்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.

1 comment:

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி