100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 25, 2022

100 ஆண்டுகள் கடந்த அரசு பள்ளிகள், தலைவர்கள் படித்த பள்ளிகள் விவரம் கோரி பள்ளிக் கல்வித்துறை உத்தரவு.

 தங்கள் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளில் 100 ஆண்டுகள் கடந்து , நூற்றாண்டு விழாக்கள் கொண்டாடப்படும் விதமாக , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . ஆகவே , அப்பள்ளிகளின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.



தங்கள் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் , தமிழ் அறிஞர்கள் , தலைவர்கள் , விளையாட்டு வீரர்கள் , பல்துறை சாதனையாளர்கள் , அறிவியல் அறிஞர்கள் கல்வி பயின்ற பள்ளியை கண்டறிந்து , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . மேலும் , அப்பள்ளி நூலகங்களிலுள்ள அரிய நூல்கள் மற்றும் முக்கிய தலைவர்கள் குறித்த ஆவணங்கள் மின்னுருவாக்கம் செய்யப்பட்டு பாதுகாக்கப்படும் . ஆகவே , அப்பள்ளியின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.



தங்கள் மாவட்டத்தில் , அரசு பள்ளிகளில் உள்ள 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டு பயன்பாட்டில் உள்ள பாரம்பரிய பள்ளிக் கட்டடங்களும் உரிய முறையில் பழமை மாறாமல் புதுப்பிக்கவும் , புராதான கட்டடங்களை ( Heritage building ) சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது அவசியமாகிறது . ஆகவே , அப்பள்ளிகளின் விவரங்களை கீழ்காணும் படிவத்தில் பூர்த்தி செய்து இவ்வாணையரகத்திற்கு அனுப்பிவைக்குமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.


 மேலும் இதன் சார்பான விவரங்கள் தங்கள் மாவட்டத்தில் ஏதும் இல்லை எனில் " இன்மை " அறிக்கை அனுப்பிடுமாறு மீளவும் கேட்டுக்கொள்கிறேன்.



1 comment:

  1. பாவம், பள்ளிக் கல்வித்துறை,,, புள்ளிக் கல்வித்துறை ஆகிடும் போல.... கோடிகள் ஒதுக்கப்படும் பட்ஜெட் என்ன ஆகுது?!
    ”அரசு பள்ளிகளில் , தமிழ் அறிஞர்கள் , தலைவர்கள் , விளையாட்டு வீரர்கள் , பல்துறை சாதனையாளர்கள் , அறிவியல் அறிஞர்கள் கல்வி பயின்ற பள்ளியை கண்டறிந்து , பள்ளியினை சீர்செய்தல் , வெள்ளை அடித்தல் , மற்றும் மின்சாதன பொருட்களை பழுது பார்த்தல் சார்பான பணிகளை மேற்கொள்ளவேண்டியது” அப்படினா அவிங்க கிட்ட போய் நன்கொடை கேட்கனுமா?! அவங்களே தரமாட்டங்களா?!

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி