'நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம்': பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Apr 1, 2022

'நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம்': பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்

 

நீட் தேர்வை தமிழகத்திற்குள் நுழைய விடமாட்டோம் என்பதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியாக இருப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். மதுரை புதுநத்தம் சாலையில் கட்டப்பட்டு வரும் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணிகளை அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பழனிவேல் தியாகராஜனுடன் அவர் ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் அன்பில் மகேஷ், மருத்துவ கல்விக்கான நுழைவு தேர்வான நீட் தேர்வு உள்பட எந்த நுழைவுத் தேர்வும் கூடாது என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்கிறது.


தி.மு.க தேர்தல் அறிக்கையிலும், இது குறிப்பிட்டிருந்தது. நீட் தேர்வுக்கான தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், ஹைடெக் லேப் மூலமாக நீட் தேர்வு எழுதும் அரசு பள்ளி மாணவர்களுக்கு முழுமையான பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளதாகவும், நீட் தேர்வில் இருந்து விலக்கு பெறும் வரை ஓய மாட்டோம் என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர், பள்ளிக்கூடங்களில் பாலியல் தொல்லை சார்ந்த பிரச்சினைகள் ஏற்படுவதை தடுக்க மாணவிகளுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார்.

9 comments:

 1. NEET EXAM NO
  TET TWO EXAM AHH🤦‍♂️🤦‍♂️🤦‍♂️

  ReplyDelete
 2. ஜனவரி மாதம் கொடுத்த மனமொத்த மாறுதல் விண்ணப்பதிற்கு ஆணை வழங்க முடியல; நீட் தேர்வு ரத்து செய்வார்களாம்.

  ReplyDelete
 3. மனமொத்த மாறுதல் பற்றி எந்த ஒரு ஆசிரியர் சமுதாய சங்கமும் அதிகாரிகளிடம் முறையிட்டு நடவடிக்கை எடுக்காதது ஏன் ? பின் ஆசிரியர் நலன் காக்க இயலாத சங்கம் எதற்கு ?

  ReplyDelete
 4. அடுத்த தேர்தல் வரை சொல்லிக்கொண்டே இருப்போம்.

  நீங்களும் ஏமாந்துகொண்டே‌ இருப்பீர்களாம்.

  ReplyDelete
 5. Thodakakalviyil manamothamotha maruthal nadanthiruku.apo emisil eppadi enter aachu.kallarukum orderileye general counselling aannnayk manamothamaruthalum nathum entru potirukku.apo DSE il mattum eena emisproblem

  ReplyDelete
  Replies
  1. சரியான கேள்வி !!. ஆனால் யாரிடம் இதற்கு பதில் பெறுவது ?

   Delete
  2. இந்த கல்விச்செய்தி website ஆவது இந்த மனமொத்த மாறுதல் ( DSE ) கொடுத்திருக்கும் ஆசிரியர்களின் சங்கடமான நிலையை கல்வி அமைச்சர் மற்றும் மூத்த அதிகாரிகளிடம் முறையிட்டு நமக்கு நல்லதோர் தீர்வு காணாதா ?

   Delete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி