அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் அதிகரிக்கப்படும் : அமைச்சர் மகேஷ் பேச்சு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 9, 2022

அரசு பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் அதிகரிக்கப்படும் : அமைச்சர் மகேஷ் பேச்சு

 

“தமிழகத்தில் அரசு பள்ளிகளில் அதிகரித்துள்ள மாணவர்கள் சேர்க்கைக்கு ஏற்ப ஆசிரியர்கள் நியமனங்களும் அதிகரிக்கப்படும்” என கல்வி அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

மதுரை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களின் கல்வி அதிகாரிகள், அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மதுரை வேலம்மாள் மருத்துவக் கல்லுாரியில் மகேஷ் தலைமையில் நடந்தது. இதில் அவர் பேசியதாவது:

கல்வி, மருத்துவம் ஆகிய துறைகளில் முதல்வர் ஸ்டாலின் அதிக கவனம் செலுத்துகிறார். அதனால் தான் அதிகம் வருவாய் இல்லாத போதும் இத்துறைக்கு அதிகபட்சமாக ரூ.36,895 கோடி பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளார்.மாநிலம் முழுவதும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி வகுப்பறைகள் பயன்படுத்த முடியாதவை என கண்டறியப்பட்டு அவற்றை அகற்றும் பணிகள் நடக்கின்றன. 

அரசு பள்ளிகள் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு ரூ.7 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ.1500 கோடி வழங்கப்படவுள்ளது. இதன் மூலம் புதிய கட்டடங்கள், கழிப்பறைகள், ஆய்வகங்கள் வசதி ஏற்படுத்தப்படும்.தனியார் பள்ளி வாகனங்கள், ஓட்டுனர்கள் தகுதியை சி.இ.ஓ.,க்கள் கண்காணிக்க வேண்டும். 


ஆசிரியர்கள் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப புதிய விஷயங்களை கற்றுக்கொண்டு தனித்திறனை வளர்த்துக்கொள்ள வேண்டும். அரசு பள்ளிகளில் 66 லட்சத்தில் இருந்து 71 லட்சமாக மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது. மாணவர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய ஆசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக 'இல்லம் தேடி கல்வி' திட்டம தமிழகத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்துறைக்கு உட்பட்ட 4064 நுாலகங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

11 comments:

  1. விரைவில் சொல்ல மறந்துட்டீங்க..

    ReplyDelete
  2. வாய்லயே நல்லா வடை சுடுங்க ஜி....

    ReplyDelete
  3. பொயில் ஜி சரிங்க ஜி

    ReplyDelete
  4. இலவு காத்த கிளி ஆசிரியர்களின் நிலை

    ReplyDelete
  5. It seems fixed pay NOT normal pay.

    ReplyDelete
  6. Pg trb response sheet வருமா???

    ReplyDelete
  7. ஏமாறவேண்டாம்.உடனடியாக எதிர்பார்க்க வேண்டாம்.

    ReplyDelete
  8. பித்தலாட்டம் பொய் நம்ப வேண்டாம்

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி