Email பாருங்க...!!! தேர்வர்களுக்கு TRB இன்று வெளியிட்ட முக்கிய செய்தி! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 1, 2022

Email பாருங்க...!!! தேர்வர்களுக்கு TRB இன்று வெளியிட்ட முக்கிய செய்தி!



 ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2017-18ஆம் ஆண்டுக்குரிய அரசுப் பல்தொழில்நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனத்திற்கான பணித் தெரிவு சார்ந்து அறிவிக்கை ( அறிவிக்கை எண் . 14/2019 ) 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது . மேலும் , online வாயிலாக விண்ணப்பங்கள் மற்றும் கல்வித் தகுதி தொடர்புடைய ஆவணங்களும் பெறப்பட்டன. சான்றிதழ் சரிபார்ப்பு தொடர்பான பணிகள் மேற்கொள்ள வேண்டி பணிநாடுநர்கள் ஏற்கனவே பதிவேற்றம் செய்துள்ள கல்விச் சான்றிதழ்களுடன் கூடுதலாக சில சான்றிதழ்களை 11.03.2022 லிருந்து 18.03.2022 - ற்குள் இவ்வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய இவ்வாரியத்தால் 1103.2022 அன்று செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டது.


 மேலும் , இப்பொருள் சார்ந்து கூடுதல் விவரங்களைப் பெற மின்னஞ்சல் முகவரியும் வழங்கப்பட்டது , இச்செய்திக் குறிப்பின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் கூடுதல் கல்வித் தகுதிகள் , பணி அனுபவச் சான்றிதழ் , நன்னடத்தை சான்றிதழ் மற்றும் பிற சான்றிதழ்கள் Online வாயிலாகப் பணிநாடுநர்களிடமிருந்து பெறப்பட்டன . மேலும் , சில பணிநாடுநர்களிடமிருந்து Login ID மற்றும் Password பயன்படுத்துவது தொடர்பாகவும் , நன்னடத்தைச் ( Conduct certificate ) சான்றிதழ் பதிவேற்றம் செய்வது , இணைப்பாட விவரம் அளிப்பது / இணைப்பாடத்திற்கான ( Subject Equivalence ) அரசாணைகளைப் பதிவேற்றம் செய்வது குறித்து கூடுதல் விவரங்கள் கோரி மின்னஞ்சல்கள் இவ்வாரியத்தால் பெறப்பட்டது . இதனடிப்படையில் இவ்வாரியத்தால் 17.03.2022 நாளிட்ட செய்திக்குறிப்பின்படி , கூடுதல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் பிற ஆவணங்களை இவ்வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான இறுதித் தேதி 18.03.2022 லிருந்து 25.03,2022 ஆக இவ்வாரியத்தால் நீட்டிக்கப்பட்டது.


இதனைத் தொடர்ந்து மேலும் பல பணிநாடுநர்களிடமிருந்து மேற்காணும் பொருள் சார்ந்து மின்னஞ்சல்கள் பெறப்பட்டது. பணிநாடுநர்களிடமிருந்து பெறப்பட்ட மின்னஞ்சல்களுக்கு உரிய பதில்கள் மின்னஞ்சல் மூலம் இவ்வாரியத்தால் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது . அதிகப்படியான பணிநாடுநர்களிடமிருந்து கோரிக்கைகள் மின்னஞ்சலில் பெறப்பட்டதன் காரணமாக , 24.03.2022 நாளிட்ட இவ்வாரிய செய்திக் குறிப்பின்படி கூடுதல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை இவ்வாரிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதற்கான இறுதித் தேதி 25.03.2022 லிருந்து 01.04.2022 ஆக இவ்வாரியத்தால் நீட்டிக்கப்பட்டது.


இப்பொருள் சார்ந்து பணிநாடுநர்களிடமிருந்து Login ID மற்றும் Password பயன்படுத்துவது தொடர்பாக பெறப்பட்ட 2148 கோரிக்கை மனுக்களில் 2148 கோரிக்கை மனுக்களுக்கும் உரிய தகவல் மின்னஞ்சல் மூலம் இவ்வாரியத்தால் அளிக்கப்பட்டுள்ளது , நன்னடத்தைச் சான்றிதழ் ( Conduct certificate ) பதிவேற்றம் செய்வது தொடர்பாக பெறப்பட்ட 1398 கோரிக்கை மனுக்களில் 1085 கோரிக்கை மனுக்களுக்கு உரிய தகவல் மின்னஞ்சல் மூலம் இவ்வாரியத்தால் அளிக்கப்பட்டுள்ளது.


மேலும் , இணைப்பாட விவரம் அளிப்பது / இணைப்பாடத்திற்கான ( Subject Equivalence ) அரசாணைகளைப் பதிவேற்றம் செய்வது குறித்து கூடுதல் விவரங்கள் கோரிப் பெறப்பட்டுள்ள 7609 கோரிக்கை மனுக்கள் , பணிஅனுபவச் சான்றிதழ் பதிவேற்றம் செய்வது தொடர்பாக பெறப்பட்டுள்ள 3465 கோரிக்கை மனுக்கள் மற்றும் பிற கோரிக்கை சார்ந்து பெறப்பட்டுள்ள 2438 மனுக்களுக்கும் உரிய பதில்களை சார்ந்த மனுதாரர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புவதற்கு இவ்வாரியத்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


எனவே , ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மின்னஞ்சல் மூலம் கோரிக்கை மனுக்கள் அனுப்பியுள்ள பணிநாடுநர்கள் தங்களது மின்னஞ்சல் முகவரிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்திடமிருந்து பதில் பெறப்பட்டுள்ளதா என்பதை அவ்வப்போது உறுதி செய்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது. மின்னஞ்சல் மூலம் பெறப்பட்டுள்ள அனைவரின் கோரிக்கை மனுக்களும் பரிசீலனையில் உள்ளன.


ஆசிரியர் தேர்வு வாரிய குழுக் கூட்ட முடிவுகளின் அடிப்படையில் 10 தினங்களுக்குள் அனைவருக்கும் உரிய பதில்கள் மின்னஞ்சல் வாயிலாக அளிக்கப்படும். மேலும் , பணிநாடுநர்கள் ஏற்கனவே மின்னஞ்சல்கள் மூலம் அனுப்பிய தங்களது கோரிக்கை சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்திற்கு மீண்டும் அனுப்ப வேண்டாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

9 comments:

  1. Every week there is an announcement for Polytechnic TRB. What about PG-TRB RESPONSE SHEET AND RESULTS?!!!

    ReplyDelete
    Replies
    1. Neenga answer pannq option marandha piragu response sheet veliyagum...😄😄😄

      Delete
  2. What happened PGTRB Response sheet?

    ReplyDelete
  3. For TRB Response sheet only these things happen

    ReplyDelete
  4. MPC UG TRB COACHING CENTER ERODE
    # 100% syllabus based material and coaching
    # Slip tests, Unit tests, Full tests
    # Free demo class on 03.04.22 at 5 p.m
    # Meeting id : 602 212 5051 (Zoom)
    Password : maths
    # For details : 90420 71667

    ReplyDelete
  5. டிஆர்பி முதுகலை ஆசிரியர் தேர்வு Response sheet வெளியிடுவதை தொழில்நுட்ப கோளாறு என கூறி தாமதப்படுத்துவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது ... அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டே தேர்வு நடத்தப்பட்டது தற்போது தொழில்நுட்ப கோளாறு என கூறுவது ஏற்புடையதாக இல்லை தேர்வர்கள் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர் ... ஏற்கனவே பாலிடெக்னிக் தேர்வு ரத்து செய்யப்பட்ட காரணம் அனைவருக்கும் தெரிந்ததே... ஆசிரியர் தேர்வு வாரியம் தனது நம்பகத்தன்மையை உறுதி செய்ய வேண்டும்

    ReplyDelete
  6. பொறுமை கடலினும் பெரிது. பொறுமையே பெருமை.. TRB வாழ்க.. TNPSC வளர்க.

    ReplyDelete
  7. CV list விட்ட பிறகு,அவர்களுக்கு மட்டும் document upload panna சொல்லலாமே. ஆனால் அனைவரையும் இப்படி அலைய வைப்பது சந்தேகத்தை ஏற்படுத்தியது

    ReplyDelete
  8. எல்லா documents upload panniyachi, இனிமேல் upload pannanaum na அரிசி அட்டை,pan card, number of gas cylinder,...irukku

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி