TET - இலட்சகணக்கான இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Apr 16, 2022

TET - இலட்சகணக்கான இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு.

 

ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பிக்கும் இணையதளம் முடங்கிய நிலையில் கால அவகாசம் முடிந்ததால் இலட்சகணக்கான இளைஞர்கள் விண்ணப்பிக்க முடியாமல் தவிப்பு கூடுதல் அவகாசம் தர தமிழக அரசுக்கு வேண்டுகோள்.



தமிழக அரசின் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் முடங்கியதால் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு தயாரான மாணவ, மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

ஆசிரியர் தேர்வு வாரியம் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு ஆன்லைன் வழியாக மார்ச் 13 முதல் ஏப்ரல் 13 வரை விண்ணப்பிக்குமாறு கூறியிறுந்தது. ஆனால் ஏப்ரல் 8 ஆம் தேதி முதல் சர்வர் பிரச்சனையால் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளம் சரிவர இயங்கவில்லை.
விண்ணப்பங்களை பதிவு செய்தவர்களின் செல்போனுக்கு ஓ.டி.பி வராததால் ஆயிரக்கணக்கானவர் இணையதள மையத்தில் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்காக காத்துக் கிடந்தனர். 

தேர்வுவுக்கு விண்ணப்பிக்க கடைசி நாளான ஏப்ரல் 13 ஆம் தேதியும் அதற்கு முந்தைய நாட்களிலும் இணையதளம் முற்றிலும் முடங்கியது. 

ஏற்கனவே முதல் இரண்டு நிலைகளை நிறைவு செய்தவர்கள் தங்கள் கல்வித்தகுதி சான்றிதழ்களை பதிவேற்றம் செய்ய முடியாமல் தவித்தனர். குறிப்பாக இணைய தள வசதியில்லாத கிராமபுற , ஏழை எளிய மாணவர்கள் ஆயிரக்கணக்கானோர் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியவில்லை.

இந்நிலையில் இணைய தள கோளாறு சரி செய்யப்பட்டு தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கூடுதல் அவகாசம் வழங்கப்படும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் ஏப்ரல் 13 நள்ளிரவுவுடன் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்ததாக ஆசிரியர் தேர்வு வாரியம் கூறியுள்ளது. 

வங்கி , இரயில்வே, தபால் துறை போன்ற மத்திய அரசு வேலைகளில் வடமாநிலத்தவர் அதிகம் ஆதிக்கம் செலுத்தும் நிலையும் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெற்று அரசு பணிக்கு செல்லலாம் என எண்ணியிருந்த லட்சகணக்கான இளைஞர்கள் கனவு ஆசிரியர் தேர்வு வாரிய நடவடிக்கைகளால் சிதைந்துள்ளது.

 இணையதள கோளாரை சரிசெய்து கால அவகாசத்தை நீட்டிக்க எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, நாடாளுமன்ற உறுப்பினர் சு.ப. வெங்கடேசன், தமிழக வாலிபர் சங்கத்தினர் , தேர்வுக்கு தயாரான மாணவர்கள் பலர் சமூக வலைதளம் வாயிலாக தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால் இறுதி வரை இணையதளம் சரி செய்யப்படாமல் தேர்வுக்கான கால அவகாசம் முடிந்தது.

செய்தியாளர்கள் சந்திப்பில் பள்ளிக் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கடைசி வாரங்களில் 1.5 இலட்சம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வுக்கு விண்ணப்பிப்பித்துள்ளதாக கூறுயுள்ளார். அது அதிவேக இணையதள வசதியுள்ள பகுதிகளிலிருந்து விண்ணப்பித்திருக்கலாம். ஆனால் கிராபுற இணையதள வசதி , இணையதள வேகம் குறைந்த பகுதியில் உள்ளவர்கள் ஏற்கனவே சரிவர இயங்காத சர்வர் கோளாறு அடைந்த இணையதளத்தில் தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியாமல் போனதை எண்ணி பார்க்க வேண்டும் , கால அவகாசம் வழங்காமல் தேர்வை நடத்துவது லட்சகணக்கானோரை தேர்வில் பங்கேற்க விடாமல் ஒதுக்கி வைத்து பாரபட்சத்துடன் நடத்துவது போல் ஆகும் என பாதிக்கப்பட்டோர் ஆதங்கத்துடன் கூறுகின்றனர். 

இந்நிலையில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பிக்க மேலும் ஒரு வாரம் நீட்டிக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட வர்கள் அரசுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். 


43 comments:

  1. தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆயிரக்கணக்கான இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி தவிக்கிறார்களே அது யார் கண்ணுக்கும் தெரியவில்லை...

    ReplyDelete
    Replies
    1. சூப்பராக சொன்னீங்க...இந்த நாய்கள் அத சொல்ல மாட்டான்வ..2013 ல இருந்து காத்திரு க்கோம்

      Delete
    2. kathukitte irunga da..... 2013 la porandhavan kooda neenga adutthu sendhu ukkandhu exam eluthuvinga...

      Delete
  2. அப்டியே அறுத்து தள்ளிட்டாலும்...

    ReplyDelete
  3. மற்றவர்களுக்கெல்லாம் ஓப்பன் ஆகிறது உங்களுக்கு மட்டும் எப்படி இது ஒரு பொழப்பு

    ReplyDelete
  4. Please date extend pannunga 3 days server error ah iruku

    ReplyDelete
  5. (அரசு பணிக்கு செல்லலாம் என எண்ணியிருந்த)
    Nalla comedy

    ReplyDelete
  6. Online இல்லாம offline ல பதிவு செய்யும் வசதி கொடுத்தா மாலை 5 மணி வரை எவ்வளவு பேர் அப்ளை பன்னினாலும் 5pm வரை வாங்காம மதியமே மூடிவிட்டு போக முடியமா? ஆனால் 13 ந்தேதி 11:59 pm வரை டைம் இருந்தாலும் 8 pm க்கு மேல் சுத்தமாக முடங்கிவிட்டது.மனசாட்சியோடு 1நாள் டைம் நீட்டித்திருந்தால் அன்று இரவு சர்வர் முடங்கி இருக்காது.அப்ளை பன்னதான் டைம் கேட்கிறார்கள் இதற்கு இவ்வளவு பில்டப் பன்றது சரியா.எந்த சூழ்நிலையிலும் இறதிவறை சர்வர் முடங்காத அளவிற்கு டெக்னாலஜி இருந்தால் டைம் எக்ஸ்டண்ட் தேவையில்லை.

    ReplyDelete
  7. 27 days nalla thaane irunthathu.... Appo apply panni irukkalaam...

    ReplyDelete
    Replies
    1. 27 days enkitta apply panna panam illai nan epdi aply pandrathu, arivaliya pesakudathu

      Delete
    2. பணம் கொடுத்து வேலை வாங்க மட்டும் இருக்கும்

      Delete
    3. அருமையா சொன்னீங்க

      Delete
    4. சரக்கு அடிக்க பணம் இருக்கும்
      விண்ணப்பிக்க பணம் இருக்காது போங்கடா.......

      Delete
  8. Website not working documents upload error .....pls extend...sir

    ReplyDelete
  9. Suicide panikalam pola iruku bro intha government iapdi palivaguraga

    ReplyDelete
    Replies
    1. ஒருமாத காலம் அவகாசம் கொடுத்தும் விண்ணப்பிக்க தவறியது நமது தவறு இதில் அரசை குறை கூற ஒன்றும் இல்லை

      Delete
    2. Dmk க்கு ஜால்ரா போட சுதாகர் ஜி வந்துருக்கார்

      Delete
    3. There is no time to buy bonafide certificate for final year students. What government it is? Many candidates are in payment session. What can they do? Some candidates are in document upload session. No need 1 week time just 2 or 3 days enough. If government give opportunity to final year students, it has to extend some days definitely because B.Ed candidates also apply to paper1 and also final year students apply for both so definitely server problem will create. Need more time. Not compare with previous tet

      Delete
    4. when u apply on the very first day nothing block you. they only allot limited storage for an exam. once if the server is full u can not apply. its a practical problem. u can not always the govt for each and every problem. the mistake is ours, first accept it. many people applied without any problem , the server is busy only three days before the last date, dont u have 500 rupees for changing your life permanently. if u really wanted to apply for tet, u should have applied on the very first day.

      there is no buying of bonafide, if u are a student of a B.Ed college, u must be going to college regularly and meet the college principal frequently, no college principal or HOD will stop u getting bonafide, it requires simple requisition letter and within one hour they give u the bonafide.

      how can u say no time to buy bonafide, its shows u do irregular b,ed course and not going to college, whose mistake is this?

      almost one month time is given. so better all of u apply tet next time. they wont extend.

      Delete
  10. Please extend the date . I am live 8n village . So please consider me. I am very poor . Please consider

    ReplyDelete
  11. 500₹ லாபம்ன்னு விட்டுட்டு போங்கயா....

    ReplyDelete
  12. நகை கடன் தள்ளுபடியிலயே அவனுங்க சாயம் வெளுத்து போச்சு... இன்னும் 4 வருஷம் இன்னும் எவ்ளோ இருக்கு...

    ReplyDelete
    Replies
    1. நகைக்கடன் தள்ளுபடியில் என்ன சாயம் வெளுத்து போச்சு...திருட்டு தனமா முறைகேடு செய்து நகை அடமானம் வைத்தவர்களை தவிர அனைவருக்கும் தள்ளுபடி செய்தாச்சு....கொஞ்சமாவது அடிப்படை தெரிஞ்சா பேசுங்க இல்லைனா மூடிகிட்டு இருங்க

      Delete
    2. 5 பவுன் லிமிட்ன்னு எவனும் சொல்லல... அரசு ஊழியர்க்கு இல்லனு சொல்லல... குடும்பத்துல ஒரு ஆளுக்கு தான் தள்ளுபடின்னு எவனும் சொல்லல... டபிள் வாட்ச் டக்லஸ் பேச்ச நம்பி போய்ட்டு இருக்கு... மூட வேண்டியது நான் இல்ல...

      Delete
    3. சுதாகர் நகை கடன் பத்தி உனக்கு என்ன தெரியும் ....எல்லாம் ஏமாத்தும் அரசு

      Delete
  13. Dted padichu Inna payan
    Bsc bed eligible for paper 1 and 2
    Gov serruppadi kuddukkanum.

    ReplyDelete
    Replies
    1. Degree mudichirubtha neeengalum paper 2 eluthalaam ithu theriyaaatha

      Delete
  14. Please date extended sir Anbil makesh poyyamozi ayya konjam karuna kadunga ayya

    ReplyDelete
  15. History.tamil.english students missed call pannunka 9597412310

    ReplyDelete
  16. தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் யாருக்கும் வேலை கிடைக்க போனதில்லை.500 ரூபாய் லாபம் என்று சந்தோஷத்துடன் இருங்கள்.

    ReplyDelete
  17. PS shanmugam 9398504751. Tet doubt ah? call pannunga...

    ReplyDelete
  18. Date extend pannungka no money at this time no 500 hundared rupees tnpc only 100and TET fee only 500rupees please date extend pannungka

    ReplyDelete
  19. Kindly give job those who got pass in tet exam. Government as announced that after covid lockdown once school as re-open we will give posting. They didn't do that. Simply eyewash why they announced like that. Many schools students are suffering without teachers. April 13 is that last date. But instead of server problem many of them can't apply for the exam. kindly give another 10 or 5 days time to complete their process. It's my humble request.

    ReplyDelete
  20. Sir pls extend the date.lot of us are egarly waiting for applying this exam.pls kidly support them.

    ReplyDelete
  21. தயவுசெய்து டேட்டா கொஞ்சம் அதிகப்படுத்துங்கள் நாங்க எவ்வளவு பாதிக்கப்பட்டு இருக்கிறோம் மன உளைச்சலுக்கு ஆளாகி இருக்கிறோம் தயவு செய்து கொஞ்சம் அதிகப்படுத்துங்கள் ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

    ReplyDelete
  22. We kindly request please extend the date.

    ReplyDelete
  23. You are correct. Very worst technology in tet applying and pgtrb response sheet also

    ReplyDelete
  24. Apply panna mudiyaathavanga CTET ealuthunga...May la Notification...CTET =TNTET...CTET vacchi Compotative exam ealuthalaamm...

    ReplyDelete
  25. Please sir date extend panuga for tet exam

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி