பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் '3 மதிப்பெண்' குழப்பம்? - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 7, 2022

பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் '3 மதிப்பெண்' குழப்பம்?

 பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மூன்று மதிப்பெண் வினாவிற்கு தெளிவான விளக்கம் இல்லாததால் மாணவர்கள் குழப்பத்துடன் எழுதியுள்ளனர். வினாத்தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தாலும், நெடுவினா, கட்டுரை வினாக்கள் சொந்தமாக எழுதும் வகையில் அமைந்துள்ளது.

அதுபோல் பிரிவு இரண்டில், 34வது கட்டாய வினாவில், அ. 'அன்னை மொழியே' எனத் தொடங்கும் பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பாடல். ஆ. 'நவமணியே வடக்க யில்போல்' எனத் துவங்கும் தேம்பாவணி பாடல் எனக் கேட்கப்பட்டுள்ளது. இதில் 'அ' அல்லது 'ஆ' என இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் இரண்டு பாடலுக்கும் இடையே 'அல்லது' என இடம் பெறவில்லை. இதனால் இரண்டு பாடல்களையும் எழுத வேண்டுமா அல்லது 3 மதிப்பெண்ணிற்கான ஒரு பாடலை மட்டும் எழுத வேண்டுமா என மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.

பல மாணவர்கள் ஒரு பாடலையும், சில மாணவர்கள் இரண்டு பாடல்களையும் எழுதியுள்ளதால் இவ்வினாவிற்கு முழு மதிப்பெண் வழங்க வேண்டும் என மாணவர்கள் எதிர்பார்க்கின்றனர்.

மதுரை சருகு வலையபட்டி பள்ளி ஆசிரியர் மீனாட்சி சுந்தரம் கூறுகையில், "அந்த வினாவிற்கு 3 மதிப்பெண் தான். ஆனால் முதல் பாடலுக்கு எட்டு வரிகள், இரண்டாம் பாடலுக்கு 6 வரிகள் எழுத வேண்டும். மூன்று மதிப்பெண்ணிற்கும் இரண்டு பாடல்களையும் எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது.

இரண்டு வினாவிற்கும் இடையில் 'அல்லது' என்ற வார்த்தை விடுபட்டுள்ளதா என பெரும்பாலான ஆசிரியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது" என்றார்.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி