ஃபெல்லோஷிப் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - முழுவிவரம் : ( Application Form Direct Link) - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 17, 2022

ஃபெல்லோஷிப் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது - முழுவிவரம் : ( Application Form Direct Link)

 

ஃபெல்லோஷிப் திட்டத்தில் பள்ளிக்கல்வித் துறையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மதிப்பூதியம் மற்றும் விண்ணப்பிக்கும் இணையதள இணைப்பு.

Tamil Nadu Education Fellowship - Application Form - View here

 ஃபெல்லோஷிப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் தமிழக இளைஞர்களின் ஆற்றலைப் பயன்படுத்தி , அரசின் பல்வேறு முன்னோடித் திட்டங்களை செம்மையாக செயல்படுத்திட ஏதுவாக , நாட்டிலேயே முன்மாதிரித் திட்டமாக தமிழ்நாடு முதலமைச்சரின் ஃபெல்லோஷிப் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது . இத்திட்டத்தின் அடிப்படையில் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது . மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு , கல்வித் தரத்தை உயர்த்துவதற்காக " இல்லம் தேடி கல்வி , எண்ணும் எழுத்தும் , நான் முதல்வன் , நம் பள்ளி நம் பெருமை " என நாட்டிற்கே முன்னோடித் திட்டங்களை அறிவித்து , சிறப்பாக செயல்படுத்தி வருகிறது.


இத்திட்டங்கள் அனைத்தும் , அரசுப் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களும் அடிப்படை எண்ணறிவு , எழுத்தறிவைப் பெறுவதில் தொடங்கி , உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்குத் தேவையான திறன்களைப் பெற வேண்டும் என்ற உயரிய இலக்குடன் உருவாக்கப்பட்டுள்ளன . ஆர்வமும் , திறமையும் உள்ள இளைஞர்கள் மாநில அளவிலும் , மாவட்ட அளவிலும் தமிழ்நாடு கல்வி ஃபெல்லோஷிப் திட்டத்தில் இணைந்து பணியாற்ற அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள தகுதியின் அடிப்படையில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


• தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச , எழுத , படிக்கத் தெரிந்து இருக்க வேண்டும். 

விண்ணப்பம் செய்யும் காலம் : ஏப்ரல் 22 , முதல் ஜூன் 15 , 2022 வரை 

• பணிக்காலம் : ஜூலை 2022 முதல் ஜூன் 2024 வரை 

• தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பணிக்காலத்தில் தாங்கள் பணிபுரியும்.

 மாவட்டம் முழுவதும் தேவைக்கேற்ப பயணிக்க வேண்டும்.

• பணிக்காலத்தில் தொடர் பயிற்சிகள் வழங்கப்படுவதுடன் , பணிக்காலம் முழுவதையும் வெற்றிகரமாக முடிப்பவர்களுக்கு அரசு சார்பில் அனுபவ சான்றிதழும் வழங்கப்படும்.

அரசுப் பள்ளிகளின் தரம் மேம்பட அரசு எடுத்து வரும் இச்சிறந்த முன்முயற்சியில் இணைந்து செயலாற்ற வாருங்கள் !
2 comments:

  1. MITHIKA COACHING CENTRE... TV MALAI.. UG TRB ENGLISH Study materials available for tet paper 2 passed candidates..10 books for 10 units... all topics are covered.. 1200 questions free..materials will be sent by courier.. contact 7010520979

    ReplyDelete
  2. MIRTHIKA COACHING CENTRE... TV MALAI.. UG TRB ENGLISH Study materials available for tet paper 2 passed candidates..10 books for 10 units... all topics are covered.. 1200 questions free..materials will be sent by courier.. contact 7010520979

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி