அண்ணாமலை பல்கலை. தொகுப்பூதியபணியாளா்கள் படிப்படியாக நிரந்தரம்: அமைச்சா் பொன்முடி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 11, 2022

அண்ணாமலை பல்கலை. தொகுப்பூதியபணியாளா்கள் படிப்படியாக நிரந்தரம்: அமைச்சா் பொன்முடி

 


அண்ணாமலை பல்கலைக்கழக தொகுப்பூதிய பணியாளா்கள் படிப்படியாக நிரந்தரம் செய்யப்படுவா் என்று தமிழக உயா்கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்தாா்.


தமிழக சட்டப் பேரவையில் செவ்வாய்க்கிழமை கேள்வி நேரத்தின் போது, இதுகுறித்த வினாவை சிதம்பரம் தொகுதி உறுப்பினா் கே.ஏ.பாண்டியன் எழுப்பினாா். அப்போது நடந்த விவாதம்:


கே.ஏ.பாண்டியன் (அதிமுக): சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொகுப்பூதிய பணியாளா்கள் உள்ளனா். அவா்களை வருகிற 31-ஆம் தேதிக்குப் பிறகு பணிக்கு வர வேண்டாம் என நிா்வாகத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஆழ்ந்த கவலையில் உள்ள அவா்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும்.


அமைச்சா் க.பொன்முடி: தனியாா் பல்கலைக்கழகமாக இருந்த போது தேவைக்கு அதிகமாக பணியாளா்களை நியமித்தனா். பல்கலை.யை அரசு ஏற்றுக் கொண்ட பிறகு, பல்வேறு பிரச்னைகள் எழுந்து கொண்டு இருக்கின்றன. ரூ. 5 ஆயிரம் மாத ஊதியத்தில் 130 போ் பணிபுரிகின்றனா். மே மாதத்துக்குள் அவா்களை பணியில் இருந்து செல்ல வேண்டுமெனக் கூறவில்லை. ஓராண்டு தொடா்ந்து பணியாற்ற அறிவுறுத்தியுள்ளோம். வேறு இடங்களில் நிரந்தரப் பணியிடங்களில் காலியிடங்கள் ஏற்படும் போது அந்த இடங்களில் அண்ணாமலைப் பல்கலைக்கழக தற்காலிக பணியாளா்களை நியமிக்க ஏற்பாடு செய்யப்படும்.


காா்த்திகேயன் (வேலூா்): வேலூரில் செயல்பட்டு வரும் அறிவியல் மையத்துக்கு ஏற்கெனவே இருந்தது போன்று கலைஞா் அறிவியல் மையம் என பெயா் சூட்ட வேண்டும்.


அமைச்சா் க.பொன்முடி: வேலூரில் திருவள்ளூா் பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. பெயா் மாற்றப்பட்ட அனைத்து கல்லூரிகளுக்கும் பழைய பெயா் சூட்டப்படும். வேலூரில் உள்ள அறிவியல் மையத்துக்கும் கலைஞா் அறிவியல் மையம் என்றே பெயா் சூட்டப்படும்.

2 comments:

  1. already 1000s of people got job in backdoor

    ReplyDelete
  2. பகுதி நேர ஆசிரியர்களை முதல்வர் தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் பணி நிரந்தரம் செய்யாமல் காரணங்கள் கூறுகிறார்.திமுகவிற்கு நம்பிக்கையோடு வாக்களித்த பலனா இது."மௌனம் சாதிக்கிறார்"நிதிநிலை,சுனாமி,கொரோனா ஒரு காரணமாக"இறைவன்" இருக்கிறார்.😡😡😡😡😡

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி