இன்றுமுதல் பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

May 5, 2022

இன்றுமுதல் பகுதிநேர ஆசிரியர்கள் காலவரையற்ற உண்ணாநிலைப் போராட்டம்

 

அரசின் தொடர் புறக்கணிப்பினால் சென்னை டிபிஐ வளாகத்தில் இன்று 05/05/2022 வியாழன் முதல் தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பணிபுரியும் 12500 பகுதிநேர ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி காலவரையறையற்ற உண்ணா நிலைப் போராட்டத்தை தொடங்கியுள்ளனர்.


 திமுக தனது தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்ற உறுதி அளித்தது. மிகுந்த நம்பிக்கையுடன் வாக்களித்து வெற்றி பெறச் செய்த திமுக, ஆட்சிப் பொறுப்பேற்று ஏறத்தாழ ஒரு வருடம் நிறைவடையும் நிலையில்
' நிதி நிலையை கருத்தில் கொண்டு படிப்படியாக நிறைவேற்றப்படும் ' என்று மட்டுமே கூறி வருகிறது. அனைத்துச் சலுகைகளும் தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

  கடந்த வருடம் முழுவதும் ஆளும் கட்சியை ஆதரித்து பல்வேறு கவனயீர்ப்பு நிகழ்வுகள் நடத்தப்பட்டுள்ளன.

  பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சட்டமன்ற மானியக் கோரிக்கை விவாதத்திலும்  இது பற்றி எதுவுமே கூறப்படாதது பகுதிநேர ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 இந்தப் போராட்டத்தின் அடிப்படையில் தமிழக அரசு அழைத்துப் பேசி கவனத்துடன் பரிசீலித்து அறிவிப்பு வெளியிட்டு பணி நிரந்தரம் செய்யுமா? என்று பகுதிநேர ஆசிரியர்கள் காத்திருக்கின்றனர்.

விடியல் அரசே விடியல் கொடு...

 பொன். சங்கர்
 செய்தித் தொடர்பாளர்,
 திருப்பூர்.



6 comments:

  1. கடந்த ஆட்சியில் நியமிக்கப்பட்ட பகுதி நேர ஆசிரியர்கள் 10 ஆண்டு காலம் பொறுத்திருந்து 10000 சம்பளம். அவர்கள் தான் மனசாட்சி இல்லாமல் போய்விட்டார்கள். திமுக அரசு கண்டிப்பாக செய்யும் என்றால் ஏமாற்றத்தை கொடுத்து வருகிறது... நம்பிக்கையுடன்....

    ReplyDelete
  2. TET தேர்வுக்கு தீர்வு என்று கூறி வெற்றி பெற்றபின் நியமன தேர்வு என்று உறுதியாக கூறிவிட்டது இந்த விடியல் அரசு.... சென்ற மாதம் அவர்கள் போராட்டம் செய்தார்கள். அதன் விளைவு ஏமாற்றம்தான் மிஞ்சியது... இன்று உங்கள் போராட்டம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. Group 4 வருது miss pannathinga

    ReplyDelete
  4. Tet தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களே என்ன செய்ய போகிறீர்கள்...

    ReplyDelete
  5. MIRTHIKA COACHING CENTRE.. TV MALAI.. UG TRB ENGLISH STUDY MATERIALS available for tet paper 2 passed candidates... 10 books for 10 units...more than 2000 pages... free;1200 question....materials will be sent by courier.. contact7010520979

    ReplyDelete
  6. இந்த TET 2013பாஸ் batch -க்கு என்ன பிரச்னை? எப்ப பாரு பகுதி நேர ஆசிரியர் மீது இவ்வளவு வன்மம்!
    நாங்கள் (பகுதி நேர ஆசிரியர் ) 10 ஆண்டு அனுபவம் கொண்டவர்கள் எங்கள் போராட்டம் வேறு (தொழில் கல்வி )சார்ந்தது, நீங்கள் வேற பொது பாட பிரிவுகள் (science, சோசியல், maths)சார்ந்தவர்கள்.
    எனவே நாங்கள் எங்கள் கோரிக்கை சம்மந்தமான பதிவுகள், அறிவிப்புகள் வந்தால் மட்டும் comment இல் வந்து தவறாக திட்டுவது, தர குறைவான எழுதுவது வழக்கமாக கொண்டுவருகிறார்கள் சிலர் 😡. இதற்கு பெயர் என்ன தெரியுமா? பொறாமை!.
    தனக்கு கிடைக்க வில்லை என்றாலும் பாராவாயில்லை
    பகுதி நேர ஆசிரியருக்கு கிடைக்கக்கூடாது அதுதான் உங்கள் எண்ணம்.
    எங்களுக்கு எப்படியும் இன்னும் 4 ஆண்டுகளுக்கு உள்ள நிச்சயம் போகும் போது ஆவது பணி நிரந்தரம் பண்ணு வாங்க!
    Example: இளைஞர் காவல் படை 2012. டேட் தான் வேளைக்கு ஆனா நுழைவு அல்ல. தேர்வு நடத்தி எடுக்கணும் அவ்ளோதான்.
    வாழ்க வளமுடன்!🙏

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி