பணியை விரைந்து முடித்துவிட்டால் அதன்பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியத் தேவையில்லை - CEO Proceedings - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

May 13, 2022

பணியை விரைந்து முடித்துவிட்டால் அதன்பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியத் தேவையில்லை - CEO Proceedings


கிருஷ்ணகிரி முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களின் செயல்முறைகள் :

பள்ளிக் கல்வி ஆணையர் மற்றும் தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களின் அறிவுரைகள் நாள் 13.05.2022 பார்வையில் கண்ட அறிவுரைகளின்படி கீழ்க்காண் அறிவுரைகள் பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது 

1. அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதிப் பள்ளிகளில் 1 முதல் 9 வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்களுக்கு இன்று 13.05.2022 உடன் தேர்வுகள் நிறைவு பெறுவதால் நாளை 14.05.2022 முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்படுகிறது . 

2 அனைத்துவகை அரசு 7 அரசு உதவிபெறும் சுயநிதிப் பள்ளிகளில் விடைத்தாட்கள் திருத்துதல் , 1 முதல் 9 வகுப்புகளுக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயாரித்தல் ( தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளிலும் ஒருங்கிணைந்த மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்பட வேண்டும் ) மற்றும் தேர்ச்சியறிக்கை பதிவேடு தயாரித்தல் போன்ற பணிகளை முடித்திட ஏதுவாக பள்ளி ஆசிரியர்கள் 20.05.2022 வரை பள்ளிகளுக்கு வருகை புரிய வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது .  

3. அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதிப் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களைப் பொறுத்தவரை பள்ளி மாணவர்கள் / ஆசிரியர்களின் வருகைப்பதிவு விவரம் EMIS இணையத்தில் உள்ள பதிவுகளுடன் ஒத்திருப்பதை சரிபார்க்க வேண்டும் இரண்டு பதிவுகளும் வேறுபடும் பட்சத்தில் அவற்றை சரி செய்ய வேண்டும் மேலும் அவை இரண்டும் சரியாக உள்ளது என்பதற்கான சான்றினை பள்ளித் தலைமையாசிரியர் அந்தந்த வட்டாரக் கல்வி அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் 

4. அனைத்து வகை அரசு / அரசு உதவிபெறும் / சுயநிதி உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கும் மேற்காண் அறிவுரை பொருந்தும் . தேர்வுப் பணியில் உள்ள ஆசிரியர்கள் தேர்வுப் பணி முடிந்தவுடன் இப்பணியை மேற்கொள்ளலாம் . 20.05.2022 க்குள் இப்பணியை முடித்துவிட்டால் அதன்பிறகு ஆசிரியர்கள் பள்ளிக்கு வருகைபுரியத் தேவையில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது . உதாரணமாக திங்கள் , செவ்வாய் ( 16.05.2022 மற்றும் 17.05.2022 ) நாட்களில் பணிகள் முடிக்கப்பெற்றால் 18.05.2022 முதல் பள்ளிக்கு வரத் தேவையில்லை

5. மேலும் முன்னரே துறைத் தலைவரின் அனுமதி பெற்று வெளிநாட்டிற்குச் செல்ல திட்டமிட்டுள்ள ஆசிரியர்கள் யாரேனும் இருப்பின் அவர்கள் மேற்காண் பணிகளை முடிப்பதில் இருந்து விலக்களிக்கப்படுகிறது . அவர்கள் திட்டமிட்டபடி பயணம் மேற்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது . 

6. நாளை 14.05.2022 சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது.


முதன்மைக் கல்வி அலுவலர் கிருஷ்ணகிரி

6 comments:

 1. முதன்மைக்கல்வி அலுவலரின் ஒப்பம் இல்லை

  ReplyDelete
 2. அட டா துரைக்கு எவ்வளவு பெரிய மனசு

  ReplyDelete
 3. லூசுத்தனமா இருக்கு

  ReplyDelete
 4. ஒரு வருடத்தில் நடத்த வேண்டிய பாடங்களை ஒரு மாதத்தில் முடித்து விட்டால் வருடம் முழுக்க பள்ளிக்கு வரவேண்டியதில்லையா?

  ReplyDelete
 5. தொடக்கநிலை மாவட்ட மாறுதல் கலந்தாய்வு எப்போது.விவரம் அறிந்தவர்கள் பதிவிடவும்.

  ReplyDelete
 6. MIRTHIKA COACHING CENTRE.. TV MALAI,, UG TRB ENGLISH STUDY MATERIALS Available for tet paper 2 passed candidates...10 books for ten units... materials will be sent by courier... contact 7010520979
  Reply

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி