01.06.2022 நிலவரப்படி நிரப்பத் தகுந்த இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 7, 2022

01.06.2022 நிலவரப்படி நிரப்பத் தகுந்த இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிட விவரம் கோரி பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!

 

பள்ளிக் கல்வித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு / நகராட்சி / மாதிரி உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 01.06.2022 அன்றைய நிலவரப்படி நிரப்பத்தகுந்த இடைநிலை / பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிட விவரங்களை இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்தில் பூர்த்தி செய்து 52022 க்குள் இணை இயக்குநர் ( பணியாளர் தொகுதி ) மின்னஞ்சல் முகவரிக்கு ( jdpcc2018@gmail.com ) அனுப்பிவைக்குமாறும் அதன் நகலினை முதன்மைக் கல்வி அலுவலர் கையொப்பத்துடன் விரைவு அஞ்சலில் அனுப்பிவைத்திடவும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.

மேலும் , காலிப்பணியிட விவரங்களை அனுப்பும்போது 01.08.2021 பணியாளர் நிர்ணயத்தின்படி ஆசிரியரின்றி உபரி ( Surplus Post Without Person ) எனக் கண்டறிந்து இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு கொண்டும் பணியிடங்களை எக்காரணத்தைக் ஒப்படைக்கப்பட்ட காலிப்பணியிடங்களாகக் கொண்டு வருதல் கூடாது என்றும் கூடுதல் ( Addl . தேவையுள்ள பள்ளிகளின் Post ) பெயர்களையும் காலிப்பணியிடங்களாகக் கருதக் கூடாது என்றும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது

மேலும் , தற்போது அனுப்பப்படும் காலிப்பணியிட விவரங்கள் நாளது தேதியில் அப்பள்ளிக்கு பூர்த்தி செய்ய ஏதுவாக நிரப்பத்தகுந்த காலிப்பணியிடம் ( Eligible vacancy ) தானா என்பதை உறுதி செய்த பின்னரே உரிய படிவத்தில் பூர்த்தி செய்து அனுப்பப்படவேண்டும் எனவும் அறிவுறுத்தப்படுகிறது.


Dir Proceeding & Form - Download here...

3 comments:

  1. Thaguthi thervin adippadiyila or potti thervin adippadiyila

    ReplyDelete
  2. அதிமுக ஆட்சியில் அறிவித்த அறிவிப்புகள் ரத்து செய்ய முடியாது டெட்+ போட்டி தேர்வு வைத்த பின்பு தான் திமுக அடுத்த முடிவு எடுக்க முடியும்

    ReplyDelete
  3. அதை தொடர்ந்து செயல்படுத்தவும்,
    ரத்து செய்யவும்,
    முழு அதிகாரம் உண்டு,
    Option 1 2013 TET
    தேர்ச்சி பெற்ற வர்களை
    Seniority அடிப்படையில்
    நியமனம்,
    Option 2.2013 தேர்ச்சி பெற்ற வார்களை
    தொகுப்பூதிய அடிப்படையில்
    நியமனம்,
    Option 3..TET தேர்ச்சி பெற்ற அனைவருக்கும்
    போட்டி தேர்வு...
    ***OPTION 2 உடனடி நியமனத்துக்கு எளிய வழி முறை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி