10,11,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் அனைவரையும் துணை தேர்வெழுத எழுதவைக்க உத்தரவு. - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 6, 2022

10,11,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வி அடையும் மாணவர்கள் அனைவரையும் துணை தேர்வெழுத எழுதவைக்க உத்தரவு.


நடைபெற்று முடிந்த மே -2022 பத்தாம் வகுப்பு / மேல்நிலை ( முதலாமாண்டு இரண்டாமாண்டு ) பொதுத் தேர்வில் தோல்வியுற்ற / வருகைப்புரியாத தேர்வர்களுக்கு தேர்வு முடிவுக்கு பின் ஜூலை / ஆகஸ்ட் 2022 ல் சிறப்புத் துணை பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.

 ஒவ்வொரு பள்ளித் தலைமையாசிரியரும் தத்தம் பள்ளியில் பயின்று மே -2022 ல் பத்தாம் வகுப்பு / மேல்நிலை ( முதலாமாண்டு / இரண்டாமாண்டு ) தேர்வெழுதி தோல்வியுற்ற தேர்வர்கள் எவரையும் விடுபடாமல் ஜூலை / ஆகஸ்ட் 2022 ல் சிறப்பு துணைத் தேர்விற்கு ஆன் - லைனில் பதிவு செய்திட உரிய முன்னேற்பாடுகள் செய்திடவும் , மாணவர்களை தொடர்பு கொண்டு தேர்வுக்கு தயார் செய்திடவும் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு / முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

 பள்ளிகள் ஏதேனும் இப்பணியினை செய்யாது புகார் பெறப்பட்டால் சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியர் / முதல்வர்கள் மீது உரிய ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும் என தெரிவித்துக்கப்படுகிறது. எனவே , அனைத்து பள்ளித் தலைமையாசிரியர் / முதல்வர்களும் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சிறப்பு துணைத் தேர்விற்கு அறிவிப்பு பெற்ற உடன் உரிய காலத்தில் விண்ணப்பித்திட கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

 கிருஷ்ணகிரி / ஒசூர் / தேன்கனிக்கோட்டை / மத்தூர் மாவட்டக்கல்வி அலுவலர்கள் தங்கள் கல்வி மாவட்ட ஆளுகைக்குட்பட்ட பள்ளிகளில் எவரும் விடுபடாமல் மேற்காண் தேர்வுக்கு விண்ணப்பிப்பதை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் .

1 comment:

  1. ஆமா, இவனுங்க கொழுப்பு எடுத்து போய் தேர்வுக்கு வராமல் இருப்பானுவ.. நாம இவனுகளை உருவி விட்டு தேர்வு எழுத வைக்கணும்..

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி