13,331 தற்காலிக ஆசிரியர் நியமனம் ஆபத்து: உயர் நீதிமன்றம்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 30, 2022

13,331 தற்காலிக ஆசிரியர் நியமனம் ஆபத்து: உயர் நீதிமன்றம்!

 


தமிழ்நாடு அரசு பள்ளிகளில் தகுதியற்ற, தற்காலிக ஆசிரியர்களை நியமனம் செய்வது ஆபத்தானது என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது.


தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி, முதுநிலை ஆசிரியா் பணிகளில் 13,331 காலியிடங்கள் நிலவுகின்றன. இவற்றை பள்ளி மேலாண்மைக்குழு மூலம் தற்காலிக ஆசிரியா்களை கொண்டு தொகுப்பூதியத்தில் நியமனம் செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டிருந்தது. இதற்கான பணிகள் தற்போது பள்ளிகளில் தீவிரமாக நடைபெற்று வந்தது.


ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார்.


அதில், கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை. ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள்.


தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது.


இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்க படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 


இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை ரத்து செய்யக் கோரிய வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை கருத்து தெரிவித்துள்ளது. தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க நீதிபதி எம்.எஸ்.ரமேஷ் உத்திரவிட்டுள்ளார். இந்த வழக்கு நாளைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

4 comments:

  1. பாக்க நல்லா தானே இருந்துச்சு 😍😍😍

    ReplyDelete
  2. 👞செருப்ப சாணில முக்கி எடுத்து அடிச்ச மாதிரி இருக்கு 💐தீர்ப்பு 🔥

    ReplyDelete
  3. Next doctors and nurses from ITK

    ReplyDelete
  4. தமிழ் 6 முதல் 10 வரை நீங்கள் நன்றாக படித்துள்ளீர்களா இந்த புத்தகத்தில் உங்களை சோதனை செய்து பாருங்கள் அனைத்து வினாக்களையும் ஒரே புத்தகத்தில் எடுத்து கொடுத்து உள்ளோம் contact 9976715765

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி