தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு 152 பட்டதாரிகள் தேவை: விண்ணப்பங்கள் வரவேற்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2022

தமிழ்நாடு பள்ளி கல்வித்துறைக்கு 152 பட்டதாரிகள் தேவை: விண்ணப்பங்கள் வரவேற்பு

 

தமிழ்நாட்டில் உள்ள அரசு பள்ளி கல்வியின் தரத்தை மேம்படுத்த தமிழக அரசால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள பெல்லோஷிப்  பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


திட்டத்தின் பெயர்: Tamil Nadu Education Fellowship

காலியிடங்கள்: 38

சம்பளம்: மாதம் ரூ.45,000

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


பணி: Fellows

காலியிடங்கள்: 114

சம்பளம்: மாதம் ரூ.32,000

தகுதி: ஏதாவதொரு துறையில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் மேலும் உயர்க்கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த துறைகளில் 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


தேர்வு செய்யப்படும் முறை:  விண்ணப்பத்தாரரின் தகுதி, அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.


மேலும், விண்ணப்பத்தாரர் தமிழ் மற்றும் ஆங்கிலம் சரளமாக பேச, எழுத, படிக்க தெரிந்திருக்க வேண்டும். பணி முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய வேண்டும்.


விண்ணப்பிக்கும் முறை: www.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் மேற்கண்ட பணிக்கான விண்ணப்பப் படிவத்திற்கான லிங்க் மற்றும் கூடுதல் விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.


தகுதியும் ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து வரும் 30.06.2022 ஆம் தேதிக்கு முன்னதாக கிடைக்கும்படி விண்ணப்பிக்கவும்.

1 comment:

  1. கடந்த மார்ச் மாதம் அனைத்து ஆசிரியர்களுக்கும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்பட்டது. இந்நிலையில் மலை சுழற்சி மாறுதலில் குழப்பம் நிலவியதால் ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நடத்துவது நிறுத்தம் செய்யப்பட்டு பின்னர் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதில் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்டம் இடமாறுதல் கலந்தாய்வும் நடத்தப்படவில்லை. ஆனால் அதன்பின் பள்ளி கோடை விடுமுறை விடப்பட்டது.

    அதன்பின் நடப்பு கல்வி ஆண்டில் பள்ளி திறக்கப்பட்டதும் இடமாறுதல் கலந்தாய்வு நடத்திட அறிவிப்பு வெளிவரும் என ஆசிரியர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். தற்போது மலை சுழற்சி பணி மாறுதல் பிரச்னை தீர்வு காணப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இன்னும் கலந்தாய்வு தேதி அறிவிப்பு வெளியாகவில்லை. இதனால் மாவட்டம் விட்டு மாவட்டம் இட மாறுதல் கலந்தாய்வு நடப்பு ஆண்டில் நடத்தப்படாமல் போய் விடுமோ என ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி