2013 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட நிரந்தரப் பணியிட ஆசிரியர்களுக்கு விரைவில் TET லிருந்து விலக்கு - அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்ப்பு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 7, 2022

2013 க்கு முன்பு பணி நியமனம் செய்யப்பட்ட நிரந்தரப் பணியிட ஆசிரியர்களுக்கு விரைவில் TET லிருந்து விலக்கு - அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் எதிர்பார்ப்பு

 

RTE Act அடிப்படையில் மத்திய மாநில பள்ளிகளில் பணி நியமனம் பெறும் ஆசிரியர்கள் கட்டாயம் TET தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும் என்ற நிபந்தனை கடந்த 23/8/2010 முதல் அமலாக்கம் செய்யப்பட்டது.

ஆனால் தமிழகத்தில் இது சற்றே தாமதமாக அரசாணை எண் 181 மூலம் நடைமுறைப் படுத்தப்பட்டது. 

இந்த சட்ட நடைமுறையில் ஆசிரியர்கள் பணி நிரப்புதல் தொடர்பாகவும், நிரந்தர  பணியிடங்களில் பணி நியமனம் பெறும் ஆசிரியர்களுக்கு TET கட்டாயம் என்ற பள்ளிக்கல்வி இயக்கக செயல்முறைகள் 16/11/2012 அன்று தான் வெளிவந்தது என்பதாலும், இந்த தேதிக்கு முந்தைய காலகட்டத்தில் பணி நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக, பல்வேறு வழிகளில் தமிழக அரசிடமிருந்து TET லிருந்து விலக்கு வேண்டி கோரிக்கைகள் வைத்து வந்த நிலையில் கடந்த ஆட்சியாளர்கள் மறுப்பு தெரிவித்து வந்தனர். விலக்கு தருவதில் பல்வேறு பாகுபாடுகளும், குழப்பங்களும் இருந்து வந்தன. அதை தீர்க்கும் விதமாகவும், பாதிக்கப்பட்ட ஆசிரியர்களைப் பாதுகாக்கும் விதமாகவும், பத்தாண்டுகளுக்கு மேல் கல்வி கற்றல் கற்பித்தலில் உள்ளதையும் கருத்தில் கொண்டு தற்போதைய தமிழக அரசு விரைவில் அரசாணை வெளிவிடும் எனவும் பள்ளிக்கல்வி துறை ஆணையகம் வழியாக நம்பத்தகுந்த வட்டாரத் தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

நிரந்தரமாக பணியிடத்தில் பணி நியமனம் பெற்று இன்று வரை TET லிருந்து விலக்கு தொடர்பான தெளிவான அரசாணை இல்லாமல் தமிழக அரசிடமிருந்து ஒரு நல்ல விடியல் வரும் என காத்துக் கொண்டு இருப்பவர்கள்: 

1) 23/8/2010 க்கு பிறகு (TRB / வேலைவாய்ப்பக பதிவு மூப்பு அடிப்படையில்) நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் 

2)  23/8/2010 க்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள். 

3) ஆசிரியர் அல்லாத அரசு பணியிடங்களில் பணி நியமனம் பெற்று, 23/08/2010 க்குப் பிறகு பதவி உயர்வு மூலமாக இடைநிலை (TET PAPER 1) / பட்டதாரி (TET PAPER 2) ஆசிரியர்களாக பணியில் தொடருபவர்கள். 

4) சத்துணவுத் துறையில் அரசு பணியிடங்களில் பணி நியமனம் பெற்று, 23/08/2010 க்குப் பிறகு பதவி உயர்வு மூலமாக இடைநிலை / பட்டதாரி ஆசிரியர்களாக பணியில் தொடருபவர்கள். 

5) 23/8/2010 க்கு பிறகு அரசு மற்றும் அரசு உதவிபெறும் சிறுபான்மை / சிறுபான்மையற்ற பள்ளிகளில் நிரந்தர பணியிடங்களில் பணி நியமனம் செய்யப்பட்ட இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களில் ஒரு சிலர் தற்போது நீதிமன்ற வழிகாட்டல் அடிப்படையில் முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்களாக / தலைமை ஆசிரியர்களாக பணி புரிந்து வருபவர்கள். 

தற்போதைக்கு TET விலக்கு தொடர்பான பெரும்பாலான வழக்குகள் நிறைவுற்று இருப்பதால், இந்த நிரந்தரமாக பணியிடத்தில் சேர்ந்த ஆசிரியர்களைப் பாதுகாக்க வேண்டிய கடமையும் பொறுப்பும் தமிழக அரசிற்கு உண்டு. மேலும், பெரும்பாலான ஆசிரியர்கள் பத்தாண்டுகளுக்கு மேல் பணி புரிந்த அனுபவசாலிகள் என்பதாலும், 50 வயதிற்கும் மேற்பட்டவர்கள் என்பதாலும், மறைந்த முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களால் மொழியப்பட்ட அரசாணைகளின்படி பணியில் சேர்ந்தவர்கள் என்பதாலும், ஏற்கனவே ஊதியம் பெற்று வருவதால் அரசிற்கு புதிய செலவினங்கள் ஏதுமில்லை என்பதாலும், TET க்கு நிகரான புத்தாக்கப் பயிற்சி ஒன்றைத் தந்து விரைவில் TET பாதிப்பிலிருந்து விடுபட வழிவகை செய்யப்படும் எனவும் கல்வித்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

7 comments:

 1. TET 2013,14,17,19பாஸ் செய்து விட்டு காத்திருப்போர் நிலை என்ன.இவர்கள் தனியார் பள்ளியில் 10 மேல் தனியார் பள்ளியில் கஷ்டப்பட்டு கொண்டு இருப்பது உங்களுக்கு தெரியாதா.

  ReplyDelete
 2. 10 வருடமாக அரசு பள்ளிகளில் பணிபுரிந்தும்்தேர்வில் தேர்ச்சி பெறாமல் இருப்பது ஏன்.இவர்களுக்கு அரசு ஆதரவு தந்தால் ? . 2013,14,17,19TET ல் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கும் ஆதரவு தந்தால் தான் நியாயம் .

  ReplyDelete
  Replies
  1. Bro Namma pass panni irukom but avanga work panni Irukanga so ithai accept pannanum but that same time namakum posting podanum athai nama keppom

   Delete
 3. அதை தான் நானும் சொல்ல வந்தேன் . அவர்களுக்கு TET வேணாம் என்று go வெளியிடும்போதுு. TET தேர்ச்சி பெற்ற நமக்கும் அனைவருக்கும் படி படிப்படியாக வேலை வழங்கிய பின் ‌‌இனி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்கப்படும்.என்ற go வை நமக்கு விட வேண்டும். இல்லை என்றால் நம் வாழ்க்கை யை‌ கேள்விக் குறி யாக மாற்றி‌விடுவார்கள் அரசியல்வாதி கள்.நமக்கான நேரம் இப்பொழுது மட்டும் தான்.

  ReplyDelete
 4. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சிப் பெற்ற நபர்களுக்கு பணி நியமனத் தேர்வு வைப்பார்களாம்? பணியில் இருப்பதால் இவர்களுக்கு ஆசிரியர் தகுதித் தேர்வில் விலக்கா? இதுதான் திராவிட மாடல் அரசாங்கம்? கடந்த 8 வருடங்களுக்கு மேலாக பணிநியமனம் செய்யாமல் இழுக்கப்படிப்பதும் திராவிட அரசாங்கம்.

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி