9ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 7, 2022

9ஆம் வகுப்பு தேர்வு எழுதிய மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி: பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!

 தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் வரும் அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள், தனியார் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவருக்கும் ஆண்டுதோறும் கட்டாய தேர்ச்சி வழங்கப்பட்டு வருகிறது.


1 முதல் 8ம் வகுப்பு வரையிலான மாணவர்கள் ஆல் பாஸ் என்ற நடைமுறை ஏற்கனவே அமலில் உள்ள நிலையில், தற்போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டுள்ளது.


அதன்படி, இறுதித்தேர்வு மதிப்பெண்களை கணக்கில் எடுக்காமல் ஆல்பாஸ் செய்ய அதிகாரிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.


அதேசமயம் தேர்வு எழுதாத மாணவர்களுக்கு தேர்ச்சி இல்லை என்றும் இறுதித் தேர்வில் பங்கேற்காத மாணவர்களுக்கு தனித் தேர்வு நடத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.


கொரோனா தாக்கம் காரணமாக பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்பட்டது, பாடத்திட்டம் குறைக்கப்பட்டது போன்றவற்றைக் கருத்தில் கொண்டு 9-ஆம் வகுப்பு ஆண்டு இறுதித் தேர்வில் பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெறுவதாகவும், தேர்வுகளில் பங்கேற்காத மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தி தேர்ச்சியளிக்க வேண்டும் என்றும் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. அதேவேளையில் நீண்ட நாட்களாக பள்ளிக்கே வராத மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி வழங்கப்படாது என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

2 comments:

  1. 1to 8th வரை மட்டுமே தேர்ச்சி என அறிவிக்க வேண்டும். ஆனால் 9th கட்டாயம் தேர்ச்சி ஆக்க கூடாது. ஏனெனில் இந்த அறிவிப்பு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு அலட்சியப் போக்கை ஏற்படுத்தும் . கட்டிடத்துக்கு எப்படி பவுண்டேஷன் முக்கியமோ அதுபோல மேல்நிலை கல்வி க்கு 9ஆம் வகுப்பு மிகவும் முக்கியம். வேண்டுமானால் தோல்வி அடைந்த பாடங்களை எழுத சிறப்பு வகுப்பு நடத்தி சிறப்பு துணைத் தேர்வில் தேர்ச்சி பெற வைக்கலாம். இது அவர்களின் தன்னம்பிக்கை வளர்க்கும். முயற்சி திருவினையாக்கும். என்ற பழமொழி. எதிர்கால வாழ்க்கை வெற்றி பெற வழிவகுக்கும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி