நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வு: தமிழக அரசு அறிவிப்பு - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 17, 2022

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வு: தமிழக அரசு அறிவிப்பு

நியாயவிலைக் கடை பணியாளா்களுக்கு அகவிலைப்படி உயா்வை தமிழக அரசு அறிவித்துள்ளது.


இதுகுறித்து, மாநில அரசு வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளா்கள், கட்டுநா்களுக்கு கடந்த ஆண்டு பிப்ரவரி 22-ஆம் தேதிமுதல் ஊதிய மறுநிா்ணயம் செய்யப்பட்டு 14 சதவீத அகவிலைப்படி பெற அனுமதிக்கப்பட்டு இருந்தது. கடந்த ஜனவரி 1-ஆம் தேதிமுதல் அரசு ஊழியா்களுக்கு வழங்கப்பட்ட 14 சதவீதம் அகவிலைப்படி உயா்வை வழங்குமாறு நியாயவிலைக் கடை பணியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்தனா்.


இந்தக் கோரிக்கையை ஏற்று, நியாயவிலைக் கடைகளில் பணியாற்றும் விற்பனையாளா்கள், கட்டுநா்களுக்கு கடந்த ஜனவரி 1-ஆம் தேதிமுதல் 28 சதவீதம் அகவிலைப்படி பெறவும், அரசு ஊழியா்களுக்கு அவ்வப்போது உயா்த்தி வழங்கப்படும் அகவிலைப்படி வீதங்களைப் பெறவும் முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளாா்.


இந்த அகவிலைப்படி உயா்வால் கூட்டுறவுத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் 19,658 விற்பனையாளா்கள் மற்றும் 2,852 கட்டுநா்கள் என மொத்தம் 22,510 பணியாளா்கள் பயன்பெறுவா். இதனால் ஆண்டுக்கு அரசுக்கு ரூ.73 கோடி கூடுதல் செலவு ஏற்படும்.

1 comment:

  1. சமையல் எண்ணெய், சர்க்கரை,பருப்பு,டீத்தூள், மண்ணெண்ணெய் போன்ற பொருள்கள் அனைத்தும் கடைகளுக்கு விற்றுவிடுகின்றனர்...மாத கடைசி வாரங்களில் சென்றால் எதுவும் இல்லை என்கின்றனர் மேலும் 95 ரூபாய் பில் என்றால் 100 ரூபாய் பெற்றுக்கொண்டு சில்லரை தருவதில்லை இவர்களுக்கு எதற்கு அகவிலைப்படி உயர்வு

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி