தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்ய கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2022

தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்ய கோரிக்கை!

பள்ளி மேலாண்மைக் குழு மூலமாக தமிழக அரசுப் பள்ளிகளில் உள்ள இடைநிலை, பட்டதாரி, முதுகலைப் பட்டதாரி ஆசிரியர்கள் மதிப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட இருப்பதைத் தமிழக அரசும் கல்வித்துறையும் உடனடியாகக் கைவிட வேண்டும்


தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பட்டதாரி, முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடங்கள் மதிப்பூதிய  அடிப்படையில் பள்ளி மேலாண்மை குழுவின் மூலமாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் முடிவினைக் கைவிட்டு,  ஆசிரியர்களை நிரந்தரமாக நியமித்திட தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழகம் தமிழக முதல்வரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


ஏற்கனவே 2013ஆம் ஆண்டு TET தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்று பல ஆண்டுகளாக பணி வாய்ப்புக்குக்  காத்திருக்கும் தகுதியான நபர்களைக் கொண்டு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களையும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய TRB தேர்வில் தேர்ச்சி பெற்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டு பணி வாய்ப்பு பெறாதோருக்கும், கடந்த சில மாதங்களுக்கு முன்பு  நடத்தப்பட்ட TRB தேர்வு முடிவை உடனடியாக வெளியிட்டு அதன் மூலமும் முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிட வேண்டும்.


பள்ளி மேலாண்மைக் குழுவின் மூலமாக நிரப்பப்டவுள்ள பணியிடங்கள் புதிய பணியிடங்களோ அல்லது கூடுதல் பணியிடங்களோ அல்ல, இவை ஏற்கனவே நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கீடு செய்யப்பட்ட காலிப்பணியிடங்கள் என்பதால் நிதிச் சுமை என்பதை ஏற்றுக் கொள்ள இயலாது. இது போன்ற நிகழ்வுகள் புதிய கல்விக் கொள்கையை பிரதிபலிப்பதாகவே உள்ளது. மேலும் கல்விக்கு செலவிடும் தொகை அரசுக்கு செலவு அல்ல, அது சமூகத்திற்கான முதலீடு என்பதை உணர்ந்து இம்முடிவைக் கைவிட வேண்டும்.


2004- 2006 காலகட்டத்தில் தொகுப்பூதிய அடிப்படையில் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களை 2006 ஜூன் மாதம் முதல் பணி நிரந்தரம் செய்து தொகுப்பூதியத்தை ஒழித்த முத்தமிழ் அறிஞர் கலைஞர் வழியில் ஆட்சி நடத்தும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அரசு பள்ளி மாணவர்களின் நலன் கருதி பள்ளிகளில் நிரந்தர ஆசிரியரை நியமித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.


சே.பிரபாகரன்

மாநிலப் பொதுச்செயலாளர்

TNPGTA

16 comments:

  1. இன்னும் தகுதித் தேர்வு எழுதி 9 ஆண்டு காலம் பொறுத்திருந்து விடியல் இல்லை. செங்கோட்டை பரவாயில்லை போல உள்ளது.

    ReplyDelete
  2. 13000 teachers posting pottachu

    ReplyDelete
  3. தற்காலிகப் பணி என்றால், TET, TNPSC, PG TRB போன்ற அரசுத்தேர்வுகள் எதற்கு?....😳

    ReplyDelete
  4. PG TRB எழுதிவிட்டு Result க்காக காத்திருக்கும் சகோதர, கோதரிகளின் நிலை என்ன? Pass பண்ணியும் தற்காலிக அரசு பணிதான் என்றால், அதற்கு Private Job எவ்வளவோ மேல்.

    ReplyDelete
  5. தகுதித் தேர்வு எழுதி சான்றிதழ் சரிபார்ப்பு நடந்து 9 வருடமும் கடந்து விட்டது. இனியும் என்ன வேண்டும்?

    ReplyDelete
  6. TET TRB தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை நிரந்தர பணி நியமனம் செய்வதே நியாயம்.

    ReplyDelete
  7. கர்த்தர்தாமே இந்த பணி நியமனத்தை ஆசீர்வதிக்கும் படியாக ஜெபிக்கிறேன். 7500 ரூ, 10,000 ரூ, 12000 ரூ சம்பளம் கர்த்தர் கொடுத்த சம்பளமாய் எண்ணி துள்ளி மகிழ்ந்து களிகூறுங்கள்.. சாத்தானுக்கு இடங்கொடாமல் இந்த பணியில் கர்த்தரின் ஊழியமாய் ஏற்று செய்யுங்கள்.. ஏற்ற வேளையிலே அவர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார். அல்லேலுயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம். ஆமென்.

    ReplyDelete
    Replies
    1. அடி செருப்பால நாயே....

      Delete
    2. என் மகனே ,செருப்பை கீழே போடு வேதத்தை எடு கர்த்தர் உன்னை ஆசிர்வதிப்பார்.. இடைவிடாது ஸ்தோத்திர பலி செலுத்து.

      Delete
    3. 😁😁😁😁😁😁😁😀😀😀😁😁😁

      Delete
    4. Thank u prabhakaran sir for giving ur voice against this problem. This way of appointment should be changed and we need permanent govt job we need justice ...eligible candidates must get (TET passed candidates) must get an appointment order...

      Delete
    5. Avan avan TET pass pannittu permanent job ku wait panranga... Ithula un Jesus temporary job ku thaan support pannuvara...

      Delete
    6. ஏப்பா இதில எதற்கு மதத்தைக் கொண்டு வருகிறாய் புத்தர், மகாவீரர் போல இயேசுவும் மனிதன் தான் கடவுளாக்காதே இந்த சம்பளம் பிப்ரவரி வரைக்கும் தான் அதற்கு பிறகு என்ன செய்வாய் ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்

      Delete
    7. முட்டாள் ஏசு கிறிஸ்து மனிதரா புத்தரும் காந்தியும் ஒன்றுறா .

      Delete
  8. Thankyou so much mr.prabhakaran sir

    ReplyDelete
  9. புதிய பாட திட்டத்தில் இருந்து தமிழ் பாடம் முழுவதும் கேள்வி பதில்கள் தொகுக்கப்பட்டு உள்ளது TNPSC மற்றும் TET க்கு உங்களை நீங்கள் படித்ததை சோதனை செய்ய மிக சிறந்த புத்தகம் தொடர்பு கொள்க 9976715765

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி