அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 26, 2022

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சதுரங்கப் போட்டிகள் நடத்துதல் சார்ந்து பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்!


ஜூலை 11-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி: பள்ளிக்கல்விதுறை உத்தரவு :

ஜூலை 11-ம் தேதி முதல் ஆகஸ்ட் 5-ம் தேதி வரை அரசு பள்ளி மாணவர்களுக்கு செஸ் போட்டி நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது. அரசுப்பள்ளி மாணவர்களுக்காக நடைபெறும் செஸ் போட்டிக்கான வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. செஸ் போட்டிகளை நடத்த உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2-க்குள் புத்தாக்க பயிற்சி அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் ஜூலை 2 முதல் 8-ம் தேதி வரை செஸ் போட்டி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிடப்பட்டுள்ளது.

சர்வதேச அளவிலான 44 வது சதுரங்க ஒலிம்பியாட் போட்டிகள் மாமல்லபுரத்தில் எதிர்வரும் 27 ஜுலை 2022 முதல் 10 ஆகஸ்ட் 2022 வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக அனைத்து அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு பள்ளி , வட்டார , மாவட்ட மற்றும் மாநில அளவிலும் சதுரங்கப் போட்டிகளை நடத்திடவும் , மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவ , மாணவியருக்கு மாநில அளவில் முகாமை நடத்திடவும் , அம்மாணவர்கள் சர்வதேச சதுரங்க ஒலிம்பியாட் வீரர்களுடன் கலந்துரையாடச் செய்யவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு கீழ்க்காணும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி அனைத்து மாவட்டங்களிலும் போட்டிகள் நடத்தி மாணவ , மாணவியரைத் தெரிவு செய்யுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


வழிகாட்டு நெறிமுறைகள் - Download here

1 comment:

  1. புதிய பாட திட்டத்தில் இருந்து தமிழ் பாடம் முழுவதும் கேள்வி பதில்கள் தொகுக்கப்பட்டு உள்ளது TNPSC மற்றும் TET க்கு உங்களை நீங்கள் படித்ததை சோதனை செய்ய மிக சிறந்த புத்தகம் தொடர்பு கொள்க 9976715765

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி