அரசு பள்ளி தேர்ச்சி குறைந்தது ஏன்? பட்டியல் தயார் செய்ய அதிகாரிகள் உத்தரவு! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 29, 2022

அரசு பள்ளி தேர்ச்சி குறைந்தது ஏன்? பட்டியல் தயார் செய்ய அதிகாரிகள் உத்தரவு!

 

ஆண்டுக்கு 35 ஆயிரம் கோடி ரூபாயை செலவு செய்தபோதும், பொது தேர்வில் அரசு பள்ளிகளின் தேர்ச்சி குறைந்தது குறித்து பட்டியல் தயாரிக்க, பள்ளிக் கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.

தமிழகத்தில், பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பொது தேர்வுகள் இந்தாண்டு மார்ச்சில் நடந்தன. இந்த தேர்வின் முடிவுகள், இந்த மாதம், 20, 27ம் தேதிகளில் வெளியிடப்பட்டன.


இடைநிற்றல்

தேர்வுத்துறை வெளியிட்ட புள்ளி விபரப்படி, அரசு பள்ளிகளை பின்னுக்கு தள்ளி, தனியார் பள்ளி மாணவர்கள் அதிக மதிப்பெண்களும், தேர்ச்சியும் பெற்றுள்ளனர். இதனால், அரசு பள்ளிகளில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், அடுத்த வகுப்புக்கு முன்னேறாமல் இடைநிற்றலுக்கு ஆளாகும் நிலை ஏற்பட்டுள்ளது.

அரசு பள்ளிகளுக்காக, தமிழக அரசின் பட்ஜெட்டில், ஆண்டுக்கு 35 ஆயிரம்கோடி ரூபாய் ஒதுக்கி செலவிடுகிறது. மூன்றரை லட்சம் ஆசிரியர்கள், அரசிடம் ஊதியம் பெற்று பணியாற்றுகின்றனர். அலுவலக பணியாளர்களும், ஆய்வக உதவியாளர்களும், அரசு பள்ளி மாணவர்களுக்கான பணியில் ஈடுபடுகின்றனர்.

மேலும், ஐந்து ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், இயக்குனர்கள், இணை இயக்குனர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், தொடக்க கல்வி அலுவலர்கள், இவர்களுக்கெல்லாம் தலைமையாக பள்ளிக் கல்வி அமைச்சர் என, மிகப்பெரிய நிர்வாக முறை செயல்படுகிறது.


அதிர்ச்சி

ஆனால், தனியார் பள்ளிகளில் தாளாளர், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் என, சிறிய நிர்வாக முறையே உள்ளது. இந்த சிறிய நிர்வாகத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்ணும், அதிக தேர்ச்சியும் பெறுகின்றனர்.ஆனால், மக்களின் வரிப்பணத்தை கோடி கோடியாய் செலவு செய்து நடத்தப்படும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், குறைந்த மதிப்பெண் பெறுவது, கல்வியாளர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இந்நிலையில், அரசு பள்ளிகளின் தேர்ச்சி குறைந்தது குறித்தும், மாணவர்களின் மதிப்பெண்கள் சரிந்தது குறித்தும், பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்த திட்டமிட்டு உள்ளனர். இதற்காக, தேர்ச்சி குறைந்த அரசு பள்ளிகளின் பட்டியலை, மாவட்ட கல்வி அலுவலர்கள் வழியே தயாரிக்க,முதன்மை கல்வி அலுவலர்கள் உத்தரவிட்டு உள்ளனர்.

3 comments:

  1. தேர்ச்சி விகிதம் குறைவதற்கு காரணமே அதிகாரிகள்தான். ஆசிரியர்களை கற்பித்தல் பணி செய்யவிடாமல் நிர்வாகப் பணிகளை மட்டுமே செய்ய வைத்தால் தேர்ச்சி விகிதம் இப்படித்தான் இருக்கும். இதை முதலில் அதிகாரிகள் உணர்ந்து கொள்ள வேண்டும். பிறகு விசாரணை செய்யுங்கள். குற்றத்தை உங்கள் மீது வைத்துக்கொண்டு ஆசிரியர் மீது குற்றம் காண முயற்சிக்க வேண்டாம்.

    ReplyDelete
  2. Thaniyar pallikalil katral karpithal mattume nadakkum. Arasupallikalil katral karpithal nadakkaviduvathillai Arasu palli asiriyarhalidam karuthu ketkamal thaniyar palliative asiriyarhaidam ketpar.

    ReplyDelete
  3. விரைவில் குழு அமைக்கப்படும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி