கல்விச்செய்தி பெயரில் போலி இணையதளம் - ஆசிரியர்களே உஷார்!!! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 15, 2022

கல்விச்செய்தி பெயரில் போலி இணையதளம் - ஆசிரியர்களே உஷார்!!!

 

அன்பார்த்த ஆசிரியர்கள் , மாணவர்கள் மற்றும் வாசக நண்பர்களுக்கு வணக்கம்.


உங்களது பெருந்திரளான ஆதரவு காரணமாக நாம் கல்வி தொடர்பான அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் வழங்கி வருகிறோம்.


கடந்த 2013 முதல் நமது இணையதளமானது ஆசிரியர்களுக்காகவும்,  மாணவர்களுக்காகவும் தொடர்ந்து நேர்மையாகவும்,  உண்மையாகவும் செய்திகளை வெளியிட்டு வருகிறோம் என்பதை தாங்கள் அனைவரும் அறிந்ததே!


ஆனால் கடந்த சில மாதங்களாக Kanini kalvi என்ற பிளாக் நடத்தி வருபவர். நமது இணையதள பெயரில் தொடங்கப்பட்ட Telegram குழுவான https://t.me/kalviseithi இதனை Hacking செய்தது மட்டுமில்லாமல் நமது இணையதள பெயரிலேயே Kalviseithi Official என்ற பெயரில் பிளாக் ஆரம்பித்து நமது Logo,  நமது Website Cover ( Top Image ) நமது " நாம் அறிந்ததை உலகறியச் செய்வோம் " போன்ற அனைத்தயும் மட்டுமின்றி நமது செய்திகளையும் அப்படியே Copy , Paste செய்து வெளியிடுவதுடன்,  தேவையற்ற செய்திகள் பலவற்றையும் நமது இணையதள பெயரிலேயே வெளியிட்டு வருகிறார். 

எனவே,  அதில் வெளியிடப்படும் எந்தவொரு செய்திக்கும் கல்விச்செய்தி பொறுப்பேற்காது என்பதை வாசகர்களுக்கு தெரியப்படுத்தவே இந்த பதிவு.

Kalviseithi.net மற்றும் tnstudy.in இவை இரண்டு மட்டுமே நமது கல்விச்செய்தியின் பதிவு செய்யப்பட்ட இணையதளம். 

எனவே விரைவில் சட்டப்படி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.


நன்றி

கல்விச்செய்தி குழு

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி