கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்த்தி அரசாணை வெளியீடு - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 15, 2022

கிராம ஊராட்சித் தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்த்தி அரசாணை வெளியீடு

கிராம ஊராட்சி தலைவர்களுக்கு அமர்வுப்படி உயர்த்தி அரசாணை வெளியீடு

மாவட்ட ஊராட்சி மற்றும் கிராம ஊராட்சித் தலைவர்கள் மற்றும் ஊராட்சி உறுப்பினர்களுக்கு அமர்வுப்படித் தொகையை பத்து மடங்கு உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

நவம்பர் 1 ஆம் தேதி உள்ளாட்சி நாள் கொண்டாடப்படும் என்றும்ஸ, மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றியப் பிரதிநிதிகளுக்கு அமர்வுப் படித் தொகை பத்து மடங்காக உயர்த்தி வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஏப்ரல் மாதம் அறிவித்திருந்தார்.

அதன்படி, கூட்டங்களில் பங்கேற்கும் மாவட்ட ஊராட்சி பிரதிநிதிகளுக்கான அமர்வுப்படித் தொகை ரூ.100 இல் இருந்து ரூ.1000 என பத்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

அதேபோன்று கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி உறுப்பினர்களுக்கான அமர்வுப்படித் தொகை ஐந்து மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி