அரசு பள்ளிகளில் வகுப்பு நடத்த கர்நாடக நிறுவனத்துக்கு அனுமதி - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 22, 2022

அரசு பள்ளிகளில் வகுப்பு நடத்த கர்நாடக நிறுவனத்துக்கு அனுமதி

 

தமிழக அரசு பள்ளிகளில், கர்நாடக தனியார் நிறுவனம் நேரடி வகுப்புகளை நடத்துவதற்கு, பள்ளிக் கல்வித் துறை அனுமதி வழங்கியுள்ளது.

தமிழகத்தில் தி.மு.க., ஆட்சி வந்த பின், பள்ளிக் கல்வி துறையில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.கற்பித்தல் மற்றும் நிர்வாக பணிகள், தனியாரால் மேற்கொள்ள பட்டு வருகின்றன. இந்த வகையில், கர்நாடக மாநிலம், பெங்களூரைச் சேர்ந்த தனியார் நிறுவனம், அரசு பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடத்த, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

பள்ளிக் கல்வி கமிஷனரகம் சார்பில், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தனியார் நிறுவனம் ஒன்று, 20 மாநிலங்களில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர்களின் நிலையை முன்னேற்றுவதற்காக, செயல்பட்டு வருகிறது. அந்த நிறுவனத்தின் அறிவியல் மையம், நடமாடும் அறிவியல் ஆய்வகம், இருசக்கர ஆய்வகம் மற்றும் இளம் தலைமைத்துவ திட்டம் ஆகியவற்றை, தமிழக அரசு பள்ளிகளில் செயல்படுத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

திட்டங்களை, நேரடி வகுப்பின் வாயிலாக, அனைத்து மாவட்டங்களிலும் அரசு பள்ளிகளில், ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு செயல்படுத்த, இந்நிறுவனத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.இதற்கு முதன்மை கல்வி அலுவலர்கள் அனுமதிக்க வேண்டும். இந்த நிறுவன பணிகள் செயல்படுத்துவதை, ஒவ்வொரு மாதமும் முதன்மை கல்வி அலுவலர்கள் அறிக்கையாக அளிக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி