நாளை இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வு - CEO அறிவிப்பு! - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jun 24, 2022

நாளை இடைநிலை ஆசிரியர் பணிநிரவல் மற்றும் பொதுமாறுதல் கலந்தாய்வு - CEO அறிவிப்பு!


அனைவருக்கும் இனிய காலை வணக்கம்.நாளை. சனிக்கிழமை 25.06.2022  காலை 9.30 மணிக்கு வாசவி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் திண்டுக்கல்  வருவாய் மாவட்டத்திற்குட்பட்ட ஒன்றியங்களில் 

1. இடைநிலை ஆசிரியர் பணி நிரவல் கலந்தாய்வு ( கல்வி மாவட்டத்திற்குள் / வருவாய் மாவட்டத்திற்குள்) 

2. இடைநிலை ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு ( ஒன்றியத்திற்குள்) நடைபெற உள்ளது. 

எனவே தங்களது ஒன்றியத்தில் பணி நிரவல் செய்யப்படவேண்டிய ஆசிரியர்கள் / ஒன்றியத்திற்குள்   பொது  மாறுதல் கோரி விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள்  இருப்பின் அவர்களுக்கு முறையாக தகவல் தெரிவித்து அவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள உரிய ஏற்பாடுகள் செய்யுமாறு வட்டாரக் கல்வி அலுவலர்கள்கேட்டுக் கொள்ளப் படுகிறார்கள்.

Message From CEO DGட .

கலந்தாய்வு நடைபெறும் இடம்

Sri Vasavi Matriculation Hr sec school
109, East Govindapuram, Dindigul (Near RM coloney).

2 comments:

 1. *தமிழக அரசின் அபத்தமான செயலுக்கு எதிராக கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு அவர்களின் எதிர்வினை:-*

  *பள்ளிகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 'ஏதோ ஒரு வகையில்' ஆசிரியர் கிடைப்பது மகிழ்ச்சி.*

  *ஜூலை முதல் பிப்ரவரி வரை எட்டு மாதங்கள்.*

  *மாதம் ஊதியம்:*
  *இடைநிலை 7,500/-*
  *பட்டதாரி 10,000/-*
  *முதுநிலை 12,000/-*

  *தமிழ்நாடு அரசு திறன் பெற்ற தினக் கூலிக்கு (skilled worker) நிர்ணயத்திறுக்கும் ஊதியம் ஒரு மணி நேரத்திற்கு ₹39/-.*

  *கிட்டத்தட்ட வேலை நேரம் நேரத்தை, வேலை நாட்களை கணக்கில் எடுத்தால் அந்த ஊதியம் தான் ஒரு இடைநிலை ஆசிரியருக்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.*

  *அதை விட சற்று கூடுதலாக ஒரு பட்டதாரி ஆசிரியருக்கு, அதை விட இன்னும் சற்று கூடுதலாக முதுநிலை ஆசிரியருக்கு.*

  *ஜூலை முதல் பிப்ரவரி வரை பாடம் நடக்கும் அதன் பிறகு மாதிரி தேர்வுகள், தொடர்ந்து பொதுத் தேர்வுகள் நடக்கும்.*

  *ஆக, இந்த காலத்தில் ஆசிரியர் தேவை இல்லை.*

  *தினக்கூலி நிலையில் ஆசிரியர் நியமனம் நடத்தி, ஒரு கல்வி ஆண்டை கடக்க நினைப்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் பார்வையில் ஒர் நல்வாழ்வு அரசு மேற்கொள்ளக் கூடிய நடவடிக்கையா? என்பதை பரிசீலிக்க வேண்டும்.*

  *தற்காலிகப் பணிக்காலத்தில் வேலை செய்யும் நாட்களில் உயிர் வாழ்வதற்கு தேவையான குறைந்தப்பட்ச உணவு, உடை‌, இருப்பிடம் என்று வாழ்கையை கடத்த மட்டுமே ஊதியம் பெற்றவர்கள், பணியும், ஊதியம் இல்லாத மாதங்களில் எப்படி உயிர் வாழ்வார்கள்?*

  *8 மாதம் பாடம் நடத்தி தேர்விற்கு மாணவர்களை தயார் செய்த ஆசிரியர்கள், மார்ச், ஏப்ரல், மே, ஜூன், ஆகிய நான்கு மாதங்கள் வேலையில்லாமல், ஊதியம் இல்லாமல் இருப்பார்கள்.*

  *நாடாளுமன்ற பொதுத் தேர்தலையே இரண்டு மாதங்களில் நடத்தி முடிக்கிறது தேர்தல் ஆணையம்.*

  *ஆசிரியர் தேர்வு வாரியம் இரண்டு மாதத்தில் ஆசிரியர்களை தேர்வு செய்து நிரந்தரமாக காலி பணியிடங்களை நிரப்ப இயலாதா?*

  *தற்காலிக பணி, தினக் கூலி அளவு ஊதியம் என்பது ஆசிரியர் பணியைச் சிறுமைப் படுத்துவதோடு, எத்தகைய மன உளைச்சலுக்கு ஆசிரியர்கள் ஆளாவார்கள்.*

  *ஏழ்மையை, வறுமையை பயன்படுத்தி நடத்தப்படும் உழைப்பு சுரண்டல் இல்லையா?*

  *அரசு உழைப்பு சுரண்டலில் ஈடுபடுவது நியாயமா?*

  *இது சமமான கற்றல் வாய்ப்பு என்ற கோட்பாட்டிற்கு எதிரானது இல்லையா?*

  *ஆசிரியர் ஊதியம், ஆசிரியர் நியமனம் சமமற்ற நிலையில் இருக்கும்.*

  *ஆனால் மதிப்பீடு மட்டும் சமமாக இருக்கும் என்பது இந்திய அரசமைப்புச் சட்டம் முன் வைக்கும் சமத்துவக் கோட்பாட்டிற்கு எதிரானது இல்லையா?*

  *அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு எதிராக உள்ள மனநிலை மாறாமல் அரசுப் பள்ளிகளை வலுப்படுத்துவது கடினம்.*

  ReplyDelete
 2. மிக சரியான கூற்று

  ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி