RTE - தமிழ்நாட்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 31% கூடுதல் மாணவர் சேர்க்கை: கல்வித்துறை அதிகாரிகள் தகவல் - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 27, 2022

RTE - தமிழ்நாட்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் 31% கூடுதல் மாணவர் சேர்க்கை: கல்வித்துறை அதிகாரிகள் தகவல்

 

தமிழ்நாட்டில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின் கீழ் இந்த ஆண்டு தனியார் பள்ளிகளில் சேர்ந்த மாணவர்களின் எண்ணிக்கை 31 சதவீதம் அதிகரித்திருக்கிறது. பொருளாதாரத்தில் நலிவுற்றவர்கள் மற்றும் சமூக ரீதியாக பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள் எந்தவித கட்டணமுமின்றி தனியார் பள்ளிகளில் படிக்க கட்டாய கல்வி உரிமை சட்டம் வழிவகை செய்கிறது. ஒவ்வொரு தனியார் பள்ளியிலும் 25 சதவிகித இடங்கள், ஏழை குழந்தைகளுக்காக வழங்கப்பட்டு வருகின்றன.


அந்த வகையில் நடப்பாண்டில் தனியார் பள்ளிகளில் சேர்ந்தோரின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட 31 விழுக்காடு அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு எல்.கே.ஜி. மற்றும் ஒன்றாம் வகுப்பில் 56,687 பேர் சேர்ந்தனர். இந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 74,383 ஆக உயர்ந்துள்ளது. இந்த ஆண்டு 8,234 தனியார் பள்ளிகளில் 94,000 இடங்கள் ஏழை குழந்தைகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்காக 1.42 லட்சம் பேரிடம் இருந்து 3 லட்சத்திற்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை கல்வித்துறை பெற்றிருக்கிறது.

அவற்றில் 2.60 லட்சம் விண்ணப்பங்கள் தகுதி உள்ளவை என்று பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. அதிக விண்ணப்பங்கள் போடப்பட்டிருப்பதால் கடந்த மே மாதம் குலுக்கல் முறையில் மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. ஆர்.டி.இ. எனப்படும் கட்டாய கல்வி உரிமை சட்டம் தொடர்பான விழிப்புணர்வு அதிகரித்திருப்பதால் சேர்க்கையும் அதிகரித்திருப்பதாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

2 comments:

  1. கடந்த 10 ஆண்டு காலம் வீணடித்து விட்டார்கள். நிதி இல்லை இல்லை என்று கூறி விட்டு இப்போது கோடியை இறைக்கிறார்கள். கோடிகளில் புரளுகிறார்கள். கோடிகளில் புரள்வதால் போலீசில் சிக்குண்டு வருகிறார்கள். ஆனால் அவர்களின் மனசாட்சி உறுத்தவில்லை கோடிக்கணக்கான படித்த பட்டதாரி ஆசிரியர்கள் தெருவில் திரிகிறார்கள் என்று. அதே தவறு இந்த அரசு செய்ய மாட்டார்கள் என்று நம்பி தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று உள்ளவர்கள் மற்றும் பகுதி நேர ஆசிரியர்கள் என பலரும் நொந்து போய் கிடக்கும் நிலை மாற வேண்டும்.

    ReplyDelete
  2. எல்லாம் பொய் பல மாவட்டங்களில் உரிய ஒதுக்கீடு வழக்கவில்லை

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி