School Morning Prayer Activities - 16.06.2022 - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jun 16, 2022

School Morning Prayer Activities - 16.06.2022

 

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 16.06.2022

திருக்குறள் :

பால்:பொருட்பால்

இயல்:நட்பியல்

அதிகாரம்: மருந்து

குறள் : 948

நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்

வாய்நாடி வாய்ப்பச் செயல்.


பொருள்:

நோய் என்ன? நோய்க்கான காரணம் என்ன? நோய் தீர்க்கும் வழி என்ன? இவற்றை முறையாக ஆராய்ந்து சிகிச்சை செய்ய வேண்டும் (உடல் நோய்க்கு மட்டுமின்றிச் சமுதாய நோய்க்கும் இது பொருந்தும்)


பழமொழி :

Nothing so bad but it might have been worse.

தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று


இரண்டொழுக்க பண்புகள் :


1. புதிய வருடத்தில் நான் கற்றுக் கொள்ள அநேக காரியங்கள் உண்டு. என் முழு கவனமும் அவற்றை கற்றுக் கொள்வதில் மட்டுமே வைத்து கொள்வேன்.

2. தேவையில்லாமல் பள்ளிக்கு விடுப்பு எடுக்க மாட்டேன்.


பொன்மொழி :

ஓர் அடிமைக்கு அவன் அடிமை என்பதை முதலில் உணர்த்து, பிறகு அவன் தானாகவே கிளர்ந்து எழுவான் - டாக்டர் அம்பேத்கர்


பொது அறிவு :

1. கருப்பு நிறத்தில் முட்டையிடும் பறவை எது? 

காட்டு வாத்து. 


2. பின்புறமாக மரம் ஏறும் உயிரினம் எது? 

கரடி.

English words & meanings :

Debut - the first appearance in public of an actor, sports person, etc Noun ஒரு குழு, பாடகர், நடிகர் அல்லது எழுத்தாளரின் முதல் பதிவு அல்லது முதல் தோற்றம். பெயர்ச் சொல்


ஆரோக்ய வாழ்வு :

கடுகு அதிக கலோரி ஆற்றல் தரக்கூடியது. 100 கிராம் கடுகில், 508 கலோரி ஆற்றல் கிடைக்கும். எளிதில் வளர்ச்சிதை மாற்றம் அடையும் நார்ச்சத்து உள்ளது. கெட்ட கொழுப்பை கட்டுப்படுத்தும் ஆற்றலும், உடல் பருமனை குறைக்கும் ஆற்றலும் கடுகிற்கு உண்டு.போலேட்ஸ், நியாசின், தயமின், ரிபோபிளேவின், பைரிடாக்சின், பான்டோ தெனிக் அமிலம் போன்ற, பி- காம்ப்ளக்ஸ் விட்டமின்கள் இதில் உள்ளன. நொதிகளின் செயல்பாடு, நரம்பு மண்டல செயல்பாடு மற்றும் வளர்ச்சிதை மாற்றத்தில், இவை பங்கெடுக்கக் கூடியதாகும்.இருமலை கட்டுப்படுத்த கூடியதும், விஷத்தை முறிக்கவல்லதும், ஜீரண கோளாறுகளை சரிசெய்ய கூடியதும், ஒற்றை தலைவலியை போக்கும் தன்மை கொண்டதும், விக்கலை கட்டுப்படுத்த கூடியதும், ரத்தத்தை சுத்தப்படுத்த கூடியதுமானது கடுகு. சமையலுக்கு மிகவும் முக்கியமான பொருளாக விளங்குவது கடுகு.


NMMS SCIENCE - Q 4

நீரியல் அழுத்தி எதன் அடிப்படையில் இயங்குகிறது? 

விடை: பாஸ்கல் விதி


நீதிக்கதை


தேவதைக் காட்டிய வழி

ஒரு அரசனுக்கு திடீரென இரண்டு கண்களும் குருடாகிவிடுகிறது. அதை குணப்படுத்த மலைஉச்சியில் உள்ள சஞ்சீவிமலையில் உள்ள மூலிகையை கொண்டு வந்து பிழிந்தால் தான் முடியும்.

அதற்கு மலையடிவாரத்தில் உள்ள தேவதை வழிகாட்டினால்தான் முடியும்.


அந்த அரசனுக்கு மூன்று குமாரர்கள்.

அதில் முதலாமவன் கொண்டுவருகிறேன் என கிளம்புகிறான். தேவதை வழிகாட்ட ஒர் நிபந்தனை விதிக்கிறது.

நான் உன்பின்னால் வருவேன். நான் இடது பக்கம் திரும்பு என்றால் இடது பக்கம் திரும்ப வேண்டும். வலது பக்கம் திரும்பு என்றால் வலதுபக்கம் திரும்ப வேண்டும். நீ நடப்பதை நிறுத்தக்கூடாது. நடந்து கொண்டே இருக்கவேண்டும். எது நடந்தாலும் பின்னால் திரும்பிக்க பார்க்ககூடாது என்கிறது.

முதாலாமவன் நடந்து செல்ல தேவதை வழிகாட்டிச்சென்றது. திடீரென பின்னால்வரும்தேவதையின் சலங்கை ஒலி கேட்கவில்லை. என்னாயிற்று என தன்னையறியாமல் முதாலமவன் திரும்பி பார்க்கிறான். நிபந்தனையை மீறிவிட்டான். கற்சிலையாகிவிடுகிறான்.

அடுத்து இரண்டாமவன் கிளம்புகிறான்.

கிட்டதட்ட நிபந்னைகளுக்கு உட்பட்டு பாதிதூரம் வந்துவிடுகிறான். திடீரென சிரிப்பு ஒலிகேட்கிறது.

ஆர்வம் மிகுதியால் திரும்பிபார்க்கிறான். அவனும் கற்சிலையாகி விடுகிறான்.

மூன்றாமவன் அடுத்து வருகிறான். இவனுக்கும் இதே நிபந்தனையுடன் தேவதை முன் வருகிறது. இவனும் பின் வரும் சத்தம் நின்று போனாலும் முன்னே செல்கிறான். பின்னால் அலறல் சத்தம். சிரிப்பொலி. இவைகளுக்கெல்லாம் திரும்பாமல் முன்னே செல்கிறான் வெற்றியும் பெற்று மூலிகையும் கை பற்றுகிறான்.

பின்னால் வரும் தேவதைதான் நமது மனசு. நிபந்தனையை விதித்துவிட்டு செயல் உறுதியை தடுக்க எல்லா முயற்ச்சியையும் செய்யும். அதை புறக்கணிப்பதில் தான் நம் வெற்றி அடங்கி உள்ளது.


இன்றைய செய்திகள் 16.06.22

◆தமிழ்நாடு மாநிலக் கல்விக் கொள்கை தயார் செய்ய அமைக்கப்பட்ட குழுவினர் நேற்று தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்து பேசினர்.

◆குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவதற்கான தரவுகள் சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.

◆தமிழகத்தில் உள்ள 13 சதுப்பு நிலங்கள் உள்ளிட்ட நாட்டில் உள்ள 26 சதுப்பு நிலங்களை, ராம்சார் ஸ்தலங்களாக அறிவிக்க மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

◆சென்னையில் நடந்த தேசிய சீனியர் தடகள போட்டியில் தமிழக அணி ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

◆ஈட்டி எறிதலில் புதிய தேசிய சாதனை படைத்தார் நீரஜ் சோப்ரா.

◆தேசிய, சர்வதேச போட்டிகளின்போது வீராங்கனைகளுடன் பெண் பயிற்சியாளர் கட்டாயம் செல்ல வேண்டுமென இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Today's Headlines

*The committee that prepared the Tamil Nadu State Education Policy and met the Chief Minister at the General Secretariat yesterday.

*Work is underway to collect data on the monthly payment of one thousand rupees to family heads. Finance Minister Palanivel Thiagarajan has said that the rights will be paid soon.

*The Central Ministry of Environment is taking steps to declare 26 swamps in the country, including 13 swamps in Tamil Nadu, as Ramsar sites.

*The incidence of corona infection is increasing in 3 zones in Chennai.

*The average life expectancy of Indians will be reduced by 5 years due to air pollution - data from a University of Chicago study.

*Prime Minister Narendra Modi has ordered the recruitment of 10 lakh people in the next 18 months to fill vacancies in central government departments.

*Americans Welcome' - Award for Indian Restaurant in Chicago.

* Tamil Nadu team wins overall title at National Senior Athletics Championships in Chennai.

*Neeraj Chopra set a new national record in the javelin throw.

*Sports Development Authority of India has ordered that female coaches must accompany athletes during national and international competitions.

*Prime Minister Narendra Modi has ordered the recruitment of 10 lakh people in the next 18 months to fill vacancies in central government departments.


Prepared by: Covai women ICT_போதிமரம்

1 comment:

  1. Mirthika coaching centre. tv malai..UG TRB English study materials are available for TET paper 2 passed candidates..10 books for 10 units. 2000 pages. 1200 questions free.. materials will be sent by courier.. contact 7010520979

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி