மாவட்ட மாறுதல் கலந்தாய்வு - காத்திருக்கும் 4000 ஆசிரியர்கள் - எத்தனை நாட்கள் கலந்தாய்வு நடைபெறும்? - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 8, 2022

மாவட்ட மாறுதல் கலந்தாய்வு - காத்திருக்கும் 4000 ஆசிரியர்கள் - எத்தனை நாட்கள் கலந்தாய்வு நடைபெறும்?


EMIS மூலம் நடைபெறும் இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல்
கலந்தாய்வு நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. 

முதல் நாளான நேற்று 94 முன்னுரிமை எண் வரிசை வரை மட்டுமே மாறுதல் நடைபெற்றது. கலந்தாய்வு நடைபெறும் வேகத்தை பார்த்தால் ஒரு நாளைக்கு 200 ஆசிரியர்கள் மட்டுமே மாறுதல் பெறும் சூழல் உள்ளது. 

4000 ஆசிரியர்கள் மட்டுமின்றி CEO and BEO அலுவலக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலரும் கலந்தாய்வு நடைபெறும் இடத்தில் இருக்கும் நிலை உள்ளது. ஏற்கனவே பட்டதாரி ஆசிரியர்கள் கலந்தாய்வில் இதே நிலைதான் இருந்தது. அப்படி இருந்தும் EMIS மூலம் வேகமாக கலந்தாய்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதையே இது காட்டுகிறது. 

இடைநிலை ஆசிரியர்கள் கலந்தாய்வில் ஒரு நாளைக்கு 200 பேர் மாறுதல் பெறுவதாக கணக்கிட்டால் கூட இன்னும் 15 முதல் 20 நாட்கள் வரை கலந்தாய்வு நீடிக்கும் என தெரிகிறது. 

கலந்தாய்வு வேகமாக நடைபெற மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் அல்லது ஒரு நாளைக்கு குறிப்பிட்ட எண்கள் வரையிலான முன்னுரிமை கொண்ட ஆசிரியர்கள் மட்டும் கலந்தாய்வில் பங்கேற்க அழைக்கலாம் என்றும் ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

2 comments:

  1. அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்

    ReplyDelete
  2. மனமொத்த மாறுதல் பற்றிய ஆணையை கலந்தாய்வு முடிவதற்குள் அறிவிக்கவும்.

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி