மாவட்ட மாறுதலில் ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமை சலுகை பெற்று முறைகேடு - அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 8, 2022

மாவட்ட மாறுதலில் ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமை சலுகை பெற்று முறைகேடு - அரசு கண்டறிந்து நடவடிக்கை எடுக்க கோரிக்கை!


மாவட்ட மாறுதலில் ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமை உள்ளவர்களே நிரப்பி விடுகிறார்கள் அதன் பின்னணி விவரம் :

முன்னுரிமை உள்ளவர்களில் ஒரு சிலர்கள் அரசு வழங்கும் சலுகைகளை தவறாக பயன்படுத்திக் கொண்டு பல லட்சங்கள் பெற்றுக் கொண்டு தவறாக பல ஆண்டுகள் தமிழகம் முழுவதும் தங்களுக்கு வேண்டியவர்களிடம் பணத்தைப் பெற்றுக் கொண்டு மாறிக்கொண்டே இருக்கிறார்கள் கல்வித் துறை உயர் அதிகாரிகளின் கண்களுக்கு இது தெரியவில்லையா?

ஏன் இந்த ஆசிரியர் சொந்த மாவட்டத்திற்கு வந்த பிறகு அடுத்த ஆண்டு நடைபெறும் மாவட்ட மாறுதல் கலந்தாய்வில் வேறொரு மாவட்டத்திற்கு செல்கிறார்? .

இதேபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டமாக  பல லட்சங்களை கையூட்டாக பெற்றுக் கொண்டுமாறிக் கொண்டே இருக்கும் பண ஆசை பிடித்து அலையும் ஆசிரியர் சமுதாயத்தின் விசக் கிருமிகளை விசாரணை செய்து ஒரு சிலரா? அல்லது ஒரு பெரிய நெட்வொர்க்கா? என்பதை கண்டுபிடித்து  உரிய நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட மாறுதலில் ஒவ்வொரு ஆண்டும் காத்திருந்து கடைசி வரை இடம் ஏதும் கிடைக்காத பாதிக்கப்பட்ட  பண வசதி இல்லாத ஆசிரியர் சார்பாக பணிவோடு கேட்டுக் கொள்கிறோம்.

1 comment:

  1. பணத்தாசை யாருக்கு தான் இல்லை.. கல்விசெய்தி மட்டுமென்ன இலவச தகவல் மையமா?

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி