ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலில் முன்னுரிமை அளிப்பதில் புதிய நடைமுறையைக் கைவிட கோரிக்கை! - Kalviseithi - No:1 Educational website in Tamilnadu

Jul 3, 2022

ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலில் முன்னுரிமை அளிப்பதில் புதிய நடைமுறையைக் கைவிட கோரிக்கை!

தொடக்கக்கல்வி துறை ஆசிரியர்களுக்கு மாவட்ட மாறுதலில் முன்னுரிமை அளிப்பதில் புதிய நடைமுறையைக் கைவிட்டு தற்போது பணிபுரியும் பள்ளியில் பணியேற்ற நாளைக் கணக்கில் கொண்டு முன்னுரிமை பட்டியலைச் சரிசெய்திட பேரியக்கத்தின் பொதுச்செயலாளரும் அகில இந்திய ஆசிரியர் கூட்டணியின் இணை பொதுச்செயலாளருமான அண்ணன் அவர்கள் மதிப்புமிகு. தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களுக்கு கடிதம்...



19 comments:

  1. ஏற்கனவே மாவட்ட மாறுதல் பெற்றவர்களுக்கே Station seniority பொருந்தும்.மற்ற அனைவருக்கும் Appontment seniority யே பொருந்தும்.

    ReplyDelete
  2. நீங்கள் ஒரே மாவட்டத்திற்குள் விரும்பிய இடத்திற்கு மாறி மாறி சென்று இருப்பீர்கள்..... பாவம் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் ஒரே பணியிடத்தில் பணி செய்த எனக்கும் ஒரே முன்னுரிமை கொடுக்கனும் அப்படி தானே உங்கள் கருத்து

    ReplyDelete
    Replies
    1. பணி நிரவல் மூலம் இடமாறுதல் சென்ற எனக்கு அந்த ஆண்டு joining எடுத்து சீனியாரிட்டி தயாரித்தால் சரியா ப்ரோ

      Delete
    2. நியாயமான கேள்வி

      Delete
    3. நானெல்லாம் 14 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்தவர்.விரும்பி மட்டுமே வேறு இடம் செல்வதில்லை.

      Delete
  3. இன்று முன்னுரிமை கையெழுத்து போட செல்லும் நண்பர்களே யாரும் கையெழுத்து போட வேண்டாம்

    ReplyDelete
  4. தேதி எப்போது அறிவிப்பார்கள் என்று வேதனையில் இருந்தோம் ஆனால் இன்று தேதி நெருங்கிக்கொண்டிருக்கும் போது அதை நிறுத்த என்னவெல்லாம் செய்யலாமோ அதை நாமே செய்கிறோம்.

    ReplyDelete
  5. அப்படியா அப்போ கலந்தாய்வு அடுத்த கல்வி ஆண்டு தான்...மேலும் கொரோனாவின் காரணமாக சேர்ந்த மாணவர்கள் பள்ளியை விட்டு சென்றுடுவார்கள்....அதன் பின் vacant இருக்காது......

    ReplyDelete
    Replies
    1. இப்போதாவது இடங்கள் உள்ளன.மாவட்டத்திற்குள்ளாவது சென்றுவிடலாம். Please கலந்தாய்வை நடத்தவிடுங்கள்

      Delete
    2. நீங்கள் சொன்னது மிகவும் சரி.

      Delete
  6. கலந்தாய்வை நடத்தவிடுங்கள் இல்லையென்றால் பாதிக்கப்படுவது நாம்தான்.

    ReplyDelete
    Replies
    1. கலந்தாய்வு நடத்த விடாமல் செய்யும் துரோகிகளுக்கு எதிராக நாம் போராட வேண்டும்

      Delete
  7. பள்ளிக்கல்வித்துறையில் மாறுதல் முடிந்து விட்டது.தயவு செய்து தொடக்கக்கல்வி துறையிலும் நடத்தவிடுங்கள்.

    ReplyDelete
  8. ஆசிரியர் தகுதி தேர்வு தமிழ் படித்தவர்கள் படித்து முடித்தவர்கள் தங்களை சோதனை செய்து கொள்ள மிக குறைந்த விலையில் அனைத்து வினாக்களும் அடங்கிய புத்தகம் வாங்கி பயிற்சி செய்யுங்கள் 9976715765

    ReplyDelete
  9. தொடக்கக் கல்வித்துறையில் தன் சொந்த மாவட்டத்தில் இருந்து பிற மாவட்டத்தில் நேரடி நியமனம் பெற்று வேலை செய்யும் பட்டதாரி ஆசிரியர்கள் நசுக்கப் படுகிறார்கள். எப்படி என்றால் தன் சொந்த மாவட்டத்தில் பட்டதாரி ஆசிரியர் காலிப்பணியிடம் இருந்தால் இடைநிலை ஆசிரியர்கள் பதவி உயர்வு மூலம் அந்த காலி பணியிடத்தை நிரப்பப்பட்ட பின்னர் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடத்தப்படுவதால் தன் சொந்த மாவட்டத்திற்கு செல்ல முடியாத அவலம் ஏற்படுகிறது. இதனால் 13 ஆண்டுகளாக தன் சொந்த மாவட்டத்திற்கு கலந்தாய்வு மூலம் செல்ல முடியவில்லை. பள்ளிக்கல்வித்துறையை போல state-level சீனியாரிட்டியை தொடக்கக் கல்வித் துறையிலும் ஏன் கொண்டுவர இந்த ஆசிரியர் சங்கங்கள் ஏன் முன்வரவில்லை

    ReplyDelete
  10. இவர்களின் பாதிப்பு ஆசிரியர் சங்கத்திற்கு தெரியவில்லையா

    ReplyDelete
  11. அனைவருக்கும் மாநில மூப்பு அடிப்படையில் கலந்தாய்வு நடத்துவதே நியாயமான தீர்வுக்கு வழிவகுக்கும். பணி நிரவலில் பணி செய்பவர்களுக்கு துரோகம் இழைக்காதீர்.

    ReplyDelete
  12. சட்டபூர்வமாக நடவடிக்கை மேற்கொள்வது இடமாறுதல் கலந்தாய்வை நிறுத்துவதற்கு அல்லது சில மாதங்கள் ஆவது தள்ளி வைக்கவே வழி வகுக்கும்...

    மேலும் சட்டபூர்வமான நடவடிக்கையில் அரசின் வாதங்கள் பின்வருமாறு இருக்க வாய்ப்பு உள்ளது...

    முதலாவதாக 2009 ஆம் ஆண்டு 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டு பணி நியமனமானது மாநில முன்னுரிமை அடிப்படையிலே அமைந்திருந்தது...

    அதன் அடிப்படையிலேயே இடமாறுதல் கலந்தாய்வும் உள்ளதாக வாதிடுவது...

    கணவன் மனைவி பணிபுரிவோர் முன்னுரிமை மற்றும் பிற முன்னுரிமைகள் உள்ளோர் வருடம் வருடம் அம்முன்னுரிமையை பயன்படுத்துவது போல், பணியில் சேர்ந்த தேதியும் ஒரு முன்னுரிமை அடிப்படையில் வரும் என வாதிடுவது...

    அரசு ஊழியர்கள் 3 ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணிபுரிய கூடாது என்ற விதி ஆசிரியருக்கும் பொருந்தும் (இனிமேல் பொருந்தும்) என வாதிடுவது...

    அரசு பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவர்கள் விருப்பத்தின் அடிப்படையில் ஒரே இடத்தில் மூன்றாண்டுகளுக்கு மேல் பணி புரிவதை அடிப்படை உரிமையாகவோ அல்லது முன்னுரிமையாகவோ கேட்க முடியாது என வாதிடுவது...

    மேலும் பள்ளிக் கல்வித் துறையில் மாவட்ட கல்வி அலுவலர் மற்றும் வட்டார கல்வி அலுவலர் போன்ற மாநில முன்னுரிமை அடிப்படையிலான பணி நியமனங்களுக்கு பணியில் சேர்ந்த தேதி அடிப்படையில் இடமாறுதல் கலந்தாய்வு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில் அதே மாநில முன்னுரிமை பணி நியமனத்தில் வரும் ஆசிரியர்களுக்குக்கு மட்டும் விதிமுறையை மாற்றி அமைக்க முடியாது என வாதிடுவது...

    அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இடமாறுதல் கலந்தாய்வு என்பது ஒரு சலுகை தான் தவிர உரிமை கிடையாது என்ற நீதிமன்ற தீர்ப்பை முன்வைத்து வாதிடுவது...

    இறுதியாக ஆசிரியர் நியமனம் மற்றும் இடம் மாறுதல் கலந்தாய்வு என்பது அரசின் கொள்கை முடிவுக்கு உட்பட்டது என வாதிடுவது...

    மேற்குறிப்பிட்ட காரணங்களை அரசின் வாதத்தில் முன்வைக்க வாய்ப்பு இருக்கிறது...

    ReplyDelete

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி