ஆசிரியர்கள் பயிற்சிக்கு முந்தைய முதல்வர்கள் படங்கள் நீக்கிய மடிக்கணினி - Kalviseithi - No:1 Educational Site in Tamilnadu

Jul 15, 2022

ஆசிரியர்கள் பயிற்சிக்கு முந்தைய முதல்வர்கள் படங்கள் நீக்கிய மடிக்கணினி

அரசின் இலவச மடிக்கணினிகளில் இருந்து முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் நீக்கப்பட்டு, ஆசிரியர் பயிற்சிக்கு வழங்கப்பட்டு வருகிறது.


தமிழகத்தில் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு கடந்த 2011-ம் ஆண்டு முதல் இலவச மடிக்கணினி வழங்கப்பட்டு வருகிறது.


முந்தைய ஆண்டுகளில் மாணவர்களுக்கு வழங்கியதுபோக 55,819 மடிக்கணினிகள் பள்ளிகளின் கையிருப்பில் உள்ளன. இதற்கிடையே, ஆசிரியர்களுக்கு அரசுப் பள்ளிகளில் உள்ள உயர்தொழில்நுட்ப ஆய்வகங்கள் மூலம் தொடர்ந்து பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு கூடுதலான மடிக்கணினிகள் தேவைப்படுவதால், பள்ளிகளில் கையிருப்பில் உள்ள மடிக்கணினிகளை கணினி ஆய்வகங்களுக்கு வழங்க பள்ளிக்கல்வித் துறை ஆணையர் நந்தகுமார் அனுமதி வழங்கினார்.


அரசு அறிவுறுத்தல்


இதுதொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குநர் (தொழிற்கல்வி) ஜெயக்குமாரும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பினார்.


இதைத் தொடர்ந்து, அரசுஅறிவுறுத்தலின்படி, மடிக்கணினிகளில் உள்ள முன்னாள் முதல்வர்கள் ஜெயலலிதா, பழனிசாமியின் படங்களை நீக்கிவிட்டு ஆசிரியர் பயிற்சிக்கு வழங்கப்பட்டு வருகின்றன.

No comments:

Post a Comment

கல்விச்செய்தி நண்பர்களே..
நீங்கள் ஒவ்வொருவரும் கல்விச்செய்தியின் அங்கமே..
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

குறிப்பு:
1. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. கல்விச்செய்தி இதற்கு எவ்வகையிலும் பொறுப்பல்ல.
2. கருத்தை நிராகரிக்கவோ, குறைக்கவோ, தணிக்கை செய்யவோ கல்விச்செய்தி குழுவுக்கு முழு உரிமை உண்டு.
3. தனிமனித தாக்குதல்கள், நாகரிகமற்ற வார்த்தைகள், படைப்புக்கு பொருத்தமில்லாத கருத்துகள் நீக்கப்படும்.
4. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்தை பதிவிட அன்புடன் வேண்டுகிறோம்.
-அன்புடன் கல்விச்செய்தி